மின்சாரம் தாக்கி பெண் யானை பலி: 4 ஆண்டுக்கு பின் இருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி பெண் யானை பலி: 4 ஆண்டுக்கு பின் இருவர் கைது

Added : செப் 26, 2021
Share
ஊட்டி : நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி வன சரகம் கெங்கரை அருகே மெட்டுக்கல் வனப் பகுதியில், கடந்த 2017ம் ஆண்டு வனத்தையொட்டிய தோட்டத்தில் பெண் யானை, மின்சாரம் தாக்கி பலியானது. சம்பந்தப்பட்ட நபர்கள் யாருக்கும் தெரியாமல் யானையின் உடலை புதைத்தனர். இச்சம்பவம் குறித்து வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில், நீலகிரி வன கோட்ட உதவி வனப்பாதுகாவலர் சரவணன் தலைமையில்
மின்சாரம் தாக்கி பெண் யானை பலி: 4 ஆண்டுக்கு பின் இருவர் கைது

ஊட்டி : நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி வன சரகம் கெங்கரை அருகே மெட்டுக்கல் வனப் பகுதியில், கடந்த 2017ம் ஆண்டு வனத்தையொட்டிய தோட்டத்தில் பெண் யானை, மின்சாரம் தாக்கி பலியானது. சம்பந்தப்பட்ட நபர்கள் யாருக்கும் தெரியாமல் யானையின் உடலை புதைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில், நீலகிரி வன கோட்ட உதவி வனப்பாதுகாவலர் சரவணன் தலைமையில் வனத்துறை தனிப்படை குழுவினர் ரகசியமாக ஆய்வு நடத்தினர். மெட்டுக்கள் பகுதியில் யானை புதைக்கப்பட்ட இடத்தை கால்நடை மருத்துவ குழு, கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் யானை புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி எடுத்து எலும்பு கூடு எடுக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தி உறுதிப்படுத்தினர்.

இது தொடர்பாக மெட்டுக்கல் பகுதியை சேர்ந்த ஈஸ்வரன், 40, காட்டு ராஜா, 27, ஆகியோர் மீது வனத்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு, ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X