டில்லி திரும்பினார் பிரதமர்: விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு

Updated : செப் 26, 2021 | Added : செப் 26, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
புதுடில்லி: அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இன்று (செப்.,26) டில்லி திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரீஸ் ஆகியோரை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேசினார். குவாட் மாநாட்டிலும் பங்கேற்ற அவர் நேற்று

புதுடில்லி: அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இன்று (செப்.,26) டில்லி திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.



latest tamil news



டில்லி திரும்பினார் பிரதமர் மோடி ஏர்போர்ட்டில் உற்சாக வரவேற்பு

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரீஸ் ஆகியோரை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேசினார். குவாட் மாநாட்டிலும் பங்கேற்ற அவர் நேற்று ஐக்கிய நாடுகள் பொது சபையிலும் உரையாற்றினார்.


latest tamil news



அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்ட மோடி இன்று டில்லி திரும்பினார். அமெரிக்காவில் ஒப்படைக்கப்பட்ட 157 பழங்கால கலைப்பொருட்களையும் மோடி கொண்டு வந்தார். விமான நிலையத்தில் பா.ஜ.,வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொண்டர்களை நோக்கி மோடி கையசைத்தார். பின்னர் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பாஜ., தலைவர் நட்டா மற்றும் மத்திய அமைச்சர்கள் மோடிக்கு சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர்.


latest tamil news



தொடர்ந்து நட்டா பேசுகையில், மோடி, இரவும் பகலும் நாட்டிற்காக உழைக்கிறார். ஐக்கிய நாடுகள் உரையில் அவர் பேசியதை உலக நாடுகள் கவனித்தன. இந்தியாவின் நிலையை உலகளவில் மோடி எழுப்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. சர்வதேச அளவில் இந்தியாவை தலைமை பதவிக்கு மோடி கொண்டு வந்துள்ளார். அமெரிக்க அதிபருடன், மோடிக்கு உள்ள நட்பு புதிது அல்ல. நீண்ட நாட்களாக நட்பு வைத்து உள்ளார்.


latest tamil news


பயணம் வெற்றிகரமாக முடிந்தது. அமெரிக்காவுடன் உறவு வலுப்பெறும். மோடி தலைமையில் இந்தியா மீதான உலக தலைவர்களின் பார்வை மாறியுள்ளதை அவரின் அமெரிக்க பயணம் நிரூபணம் செய்துள்ளது. கோடிக்கணக்கான இந்தியர்களின் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Soumya - Trichy,இந்தியா
26-செப்-202122:02:43 IST Report Abuse
Soumya ஹாஹா மோடி பெயரை கேட்டாலே நடுங்குகிறார்கள்
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
26-செப்-202120:09:27 IST Report Abuse
SUBBU அமெரிக்க பயணத்தை வெற்றிகரமாக முடித்து நம் தாயகம் திரும்பும் பாரத பிரதமர் திரு மோடி அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்.
Rate this:
Cancel
Jai -  ( Posted via: Dinamalar Android App )
26-செப்-202119:49:24 IST Report Abuse
Jai நான்கு நாட்களில் அமெரிக்கா சென்று வருவது என்பது மிகக் கடினமான ஒன்று. நேர மண்டலம் மாற்றம் உடலுக்கு கேட இருக்கும். 71 வயதில் இப்படி ஒரு பயணம் யாரும் விரும்பாத ஒன்று. பெறும்பற்று இருந்தால் மட்டுமே இது முடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X