பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் முறைகேடு: ஆய்வு செய்ய குழு அமைப்பு

Updated : செப் 26, 2021 | Added : செப் 26, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை: கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் முறைகேடு தொடர்பாகவும், வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து பொது நகைக்கடன்களையும் ஆயவு செய்ய தமிழக அரசு குழு அமைத்து உத்தரவு பிறப்பித்து உள்ளது.கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள்
கூட்டுறவு வங்கி, நகைக்கடன், தள்ளுபடி, முறைகேடு, தமிழக அரசு, குழு

சென்னை: கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் முறைகேடு தொடர்பாகவும், வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து பொது நகைக்கடன்களையும் ஆயவு செய்ய தமிழக அரசு குழு அமைத்து உத்தரவு பிறப்பித்து உள்ளது.

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. அதில், ஏராளமான முறைகேடுகள் இருப்பது ஆதாரங்களுடன் கண்டறியப்பட்டு உள்ளது.

5 சவரனுக்கு மட்டும் அல்லாமல் கூட்டுறவு வங்கிகளால் வழங்கப்பட்ட அனைத்து பொது நகைக்கடன்களையும் ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. கூட்டுறவு சார் பதிவாளர், கூட்டுறவு வங்கியின் சரக மேற்பார்வையாளர், நகை மதிப்பீட்டாளர் ஆகியோர் கொண்ட குழுவை அமைக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த குழு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் பெறப்பட்ட 100 சதவீதம் நகைக்கடன்களை ஆய்வு செய்யும்.


latest tamil news


சென்னை மண்டலத்தில் துணைப்பதிவாளர்களை கொண்ட குழு அமைத்து நகைக்கடன்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்து நவ.,21ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
27-செப்-202100:46:09 IST Report Abuse
Aarkay நாட்டில் நடக்கும் எல்லா முறைகேடுகளுக்கு நிச்சயமாக ஏதாவது அரசியல்வாதியின் துணை, ஆசி இருக்கும். அவர்கள் மீது மட்டும் நடவடிக்கைகள் பாயாது. அதிகாரிகள், ஊழியர்கள் மட்டத்திலேயே தண்டனைகள் நின்றுவிடும்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
26-செப்-202121:49:06 IST Report Abuse
Natarajan Ramanathan இதில் கட்டுமரம் குடும்பம் எத்தனை கிளைகளில் கடன் வாங்கி உள்ளார்களோ அவர்களிடம் இருக்கும் டன் கணக்கான தங்கத்துக்கு எத்தனை ஆயிரம் கடன்கள் வாங்கியிருப்பார்களோ.....ஆண்டவா.
Rate this:
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
26-செப்-202121:15:56 IST Report Abuse
Gnanam குழுக்கள் அமைத்து நேரத்தையும் பணத்தையும் வீணடிக்காமல் தணிக்கை மேற்கொண்டு குற்றவாளிகளை கண்டறிந்து முறைகேடு செய்த பணத்தை திரும்பப்பெற்று கூண்டில் அடைப்பதுதான் முறை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X