மழைநீர் சேகரிப்பு இருந்தால் புதிய வீடுகளுக்கு அனுமதி

Added : செப் 26, 2021
Share
Advertisement
அவிநாசி : 'கிராம ஊராட்சிகளில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லாத வீடுகளுக்கு, அனுமதி வழங்கக்கூடாது' என, உத்தரவிடப்பட்டுள்ளது.வீடுகள், வணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகள், திருமண மண்டபங்கள். பொதுக்கட்டடங்கள் என, அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும்.ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பில், அடைப்பு ஏதுமின்றி,

அவிநாசி : 'கிராம ஊராட்சிகளில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லாத வீடுகளுக்கு, அனுமதி வழங்கக்கூடாது' என, உத்தரவிடப்பட்டுள்ளது.

வீடுகள், வணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகள், திருமண மண்டபங்கள். பொதுக்கட்டடங்கள் என, அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும்.ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பில், அடைப்பு ஏதுமின்றி, முறையாக பராமரிக்க வேண்டும். பழுதடைந்த மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள், உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும். கட்டமைப்பு இல்லாத இடங்களில், உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.
முதல்வரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம், பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளில், மழைநீர் சேகரிப்பு அமைப்பு கட்டாயம் ஏற்படுத்த வேண்டும். ஊரகப் பகுதிகளில் பயன்பாட்டில் இல்லாத திறந்தவெளி கிணறுகள், கைபம்புகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிப்பு அமைப்புகளாக மாற்ற வேண்டும்.

புதிதாக கட்டப்படும் வீடு, வணிக கட்டடங்களில், மழைநீர் சேகரிப்பு அமைப்பு வசதி உள்ளதா என்பதை உறுதி செய்த பின்னரே, அனுமதி வழங்க வேண்டும் என, உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை, அடுத்த மாதம், 2ல் நடக்கவுள்ள கிராமசபா கூட்டத்தில், பொதுமக்களுக்கு வலியுறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X