பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக 7 மாவட்டங்களுக்கு கனமழை: வானிலை அறிக்கை

Updated : செப் 26, 2021 | Added : செப் 26, 2021
Share
Advertisement
சென்னை: ‛‛தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் இன்று (செப்.,26) இடி மின்னலுடன் கனமழை பெய்யும்,'' என்று தமிழக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:குலாப் புயல் இன்று காலை 8:30 மணி நிலவரப்படி கோபால்பூருக்கு கிழக்கு தென்கிழக்கே 180 கிலோ மீட்டர்
தமிழகம், 7 மாவட்டங்கள், கனமழை, வானிலை ஆய்வு மையம், அறிவிப்பு

சென்னை: ‛‛தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் இன்று (செப்.,26) இடி மின்னலுடன் கனமழை பெய்யும்,'' என்று தமிழக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:



latest tamil news



குலாப் புயல் இன்று காலை 8:30 மணி நிலவரப்படி கோபால்பூருக்கு கிழக்கு தென்கிழக்கே 180 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் மேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோர பகுதிகளில் கலிங்கப்பட்டினம் - கோபால்பூருக்கு இடையே இன்று நள்ளிரவு கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தென்மேற்கு பருவக்காற்று காரணமாக



இன்று (செப்.,26)ம் தேதி: தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


latest tamil news



நாளை 27 ம் தேதி: தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், தென்காசி, கண்ணானியகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செப்., 28 ம் தேதி: நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலுார், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்துார் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செப்., 29 மற்றும் 30ம் தேதி: வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


சென்னையை பொறுத்தவரை


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானகம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.


latest tamil news




கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு (சென்டிமீட்டரில்):


மரக்காணம் (விழுப்புரம்) 13 செ.மீ., நெய்வேலி (கடலுார்) 8 செ.மீ., குறிஞ்சிப்பாடி (கடலுார்) கடலுார் தலா 7 செ.மீ., வாலாஜா (ராணிப்பேட்டை), புதுச்சேரி, காட்பாடி (வேலுார்), ஜமுனாமரத்துார் (திருவண்ணாமலை) தலா 6 செ.மீ., சிவகங்கை, தாம்பரம் (செங்கல்பட்டு), ஆனந்தபுரம் (விழுப்புரம் தலா 5 செ.மீ.,


மீனவர்களுக்கான எச்சரிக்கை




வங்கக்கடல் பகுதிகள்



இன்று 26 மற்றும் 27 ம் தேதி: குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.


அரபிக்கடல் பகுதிகள்



இன்று 26 மற்றும் 27 ம் தேதி: கேரளா, லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு புவியரசன் தெரிவித்தார்.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X