பொது செய்தி

தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு விரைவில் புதிய மாற்றம்?

Added : செப் 26, 2021
Share
Advertisement
சென்னை : தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில், தமிழில் குறைந்தபட்ச மதிப்பெண் எடுத்தால் மட்டுமே, மற்ற தேர்வுத்தாள்களை திருத்தும் வகையில், மாற்றங்கள் கொண்டு வர, டி.என்.பி.எஸ்.சி., நிர்வாகம் முடிவு செய்துள்ளது.தமிழக அரசு பணிக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், போட்டித் தேர்வு நடத்தப்பட்டு, ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். குரூப் - 2; குரூப் - ஏ; குரூப் - 4


சென்னை : தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில், தமிழில் குறைந்தபட்ச மதிப்பெண் எடுத்தால் மட்டுமே, மற்ற தேர்வுத்தாள்களை திருத்தும் வகையில், மாற்றங்கள் கொண்டு வர, டி.என்.பி.எஸ்.சி., நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தமிழக அரசு பணிக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், போட்டித் தேர்வு நடத்தப்பட்டு, ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். குரூப் - 2; குரூப் - ஏ; குரூப் - 4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை, அடுத்த மாதம் வெளியிட டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது.மேலும், தேர்வு முறையிலும் மாற்றம் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, இனி நடக்கும் தேர்வுகளில், முதல் தேர்வாக தமிழ் பாடத்தாள் இடம்பெறும். அதில் குறைந்தபட்சம், 45 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றால் மட்டுமே, மற்ற தேர்வுத்தாள்களை திருத்தம் செய்யும் வகையில் மாற்றம் வர உள்ளது. இதற்கான அறிவிப்பு, விரைவில் வரும் என்று கூறப்படுகிறது.

தேர்வு முடிவுகள்
டி.என்.பி.எஸ்.சி., சார்பில், ஆக., 16 முதல், 27 வரை, 153 துறை தேர்வுகள் நடத்தப்பட்டன. கொள்குறி வகை சார்ந்த, 122 தேர்வுகளின் உத்தேச விடைகள், தேர்வாணையம் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டன.துறைத் தேர்வு எழுதியவர்கள், விடைகளை சரி பார்த்து கொள்ளலாம். உத்தேச விடைகள் மீது மறுப்பு இருந்தால், அக்., 2க்குள், தேர்வு நுழைவுச்சீட்டு நகல், பதிவு எண், தேர்வின் பெயர், தேர்வு குறியீட்டு எண், வினா எண், அவ்வினாவின் உத்தேச விடை, அதற்கு விண்ணப்பதாரர் கூறும் விடை போன்ற தகவல்களை குறிப்பிட்டு, contacttnpsc@gmail.com என்ற, இ - மெயில் முகவரியில் அனுப்பலாம் என, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X