அரசியல் செய்தி

தமிழ்நாடு

விவசாயி குடும்பத்திற்கு அரசு இழப்பீடு: ராமதாஸ்

Added : செப் 26, 2021
Share
Advertisement
சென்னை : 'மாற்றுத் திறனாளி விவசாயி தற்கொலைக்கு காரணமான, தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயி குடும்பத்துக்கு, 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன்; மாற்றுத் திறனாளி விவசாயி.

சென்னை : 'மாற்றுத் திறனாளி விவசாயி தற்கொலைக்கு காரணமான, தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயி குடும்பத்துக்கு, 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன்; மாற்றுத் திறனாளி விவசாயி. டிராக்டர் வாங்க, தன் உறவினர் ராமகிருஷ்ணன் பெயரில், தனியார் நிதி நிறுவனத்திடம் 2.11 லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார். அதில், 43 ஆயிரத்து 380 ரூபாய் கடன் நிலுவை உள்ளது.கொரோனா பரவல் காரணமாக போதிய வருவாய் இல்லாததால், கடன் நிலுவைத் தொகையை சரியாக செலுத்தவில்லை.

இதனால், தனியார் நிதி நிறுவன ஊழியர்கள், அவர் வீட்டுக்கு சென்று, மரியாதைக் குறைவாகப் பேசி உள்ளனர். அவகாசம் அளிக்க மறுத்ததுடன், அவரை திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த மனோகரன், விஷம் குடித்து இறந்தார்.கடன் தவணையை செலுத்த முடியவில்லை என்றால், அதற்கு அபராதமோ, கூடுதல் வட்டியோ வசூலிக்கலாமே தவிர, வாகனத்தை பறிமுதல் செய்யவோ, அவரை தகாத வார்த்தைகளால் திட்டவோ, எந்த அதிகாரமும் இல்லை.
மனோகரனை கடுமையாக திட்டி, அவர் தற்கொலை செய்வதற்கு காரணமான, தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். மனோகரன் குடும்பத்துக்கு, அரசு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X