தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை செப்.,30க்குள் 5 கோடியை எட்டும்: அமைச்சர் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை செப்.,30க்குள் 5 கோடியை எட்டும்: அமைச்சர்

Updated : செப் 26, 2021 | Added : செப் 26, 2021 | கருத்துகள் (1)
Share
தஞ்சாவூர்: ‛‛தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை செப்டம்பர் 30ம் தேதிக்குள் 5 கோடியை எட்டும்,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.தஞ்சாவூர் அருகே மொன்னையம்பட்டியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமைப் பார்வையிட்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இதுவரை 4.43 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி
தடுப்பூசி, தமிழகம், 5 கோடியை எட்டும், அமைச்சர், சுப்பிரமணியன், நம்பிக்கை,

தஞ்சாவூர்: ‛‛தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை செப்டம்பர் 30ம் தேதிக்குள் 5 கோடியை எட்டும்,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் அருகே மொன்னையம்பட்டியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமைப் பார்வையிட்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இதுவரை 4.43 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் 5 கோடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வாரந்தோறும் மத்திய அரசிடம் இருந்து 50 லட்சம் தடுப்பூசிகள் வருகின்றன. அடுத்த வாரமும் 50 லட்சம் தடுப்பூசிகள் வரப் பெற்றால் அடுத்த வாரமும் மாபெரும் முகாம் நடத்தப்படும்.


latest tamil news




தமிழகத்தில் இதுவரை 500-க்கும் அதிகமான கிராமங்களில் 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 21 கிராமங்களில் 100 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். முதல்வர் தொடங்கி வைத்த மக்களைத் தேடி மருத்துவ முகாம் மூலம் 11.04 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். நீட் தேர்வில் பங்கேற்ற 1.10 லட்சம் பேருக்கு மன நல மருத்துவர்கள், ஆலோசகர்கள் மூலம் கவுன்சிலிங் வழங்கப்பட்டுள்ளது.


latest tamil news




பின்னர், 100 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட ஊராட்சியைச் சேர்ந்த தலைவர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எம்.பி., பழனிமாணிக்கம், எம்.எல்.ஏ.,க்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


latest tamil news



Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X