பொது செய்தி

தமிழ்நாடு

பூஸ்டர் தடுப்பூசி வதந்தியை நம்ப வேண்டாம்: ராதாகிருஷ்ணன்

Updated : செப் 26, 2021 | Added : செப் 26, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: ‛‛பூஸ்டர் தொடர்பாக வரும் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம்,'' என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.தமிழகத்தில் இன்று 3-வது கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்த பின் அவர் தெரிவித்ததாவது: தேவையான தடுப்பூசி இன்று
பூஸ்டர், கோவிட் தடுப்பூசி, வதந்தி, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்,

சென்னை: ‛‛பூஸ்டர் தொடர்பாக வரும் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம்,'' என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழகத்தில் இன்று 3-வது கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்த பின் அவர் தெரிவித்ததாவது: தேவையான தடுப்பூசி இன்று கையிருப்பு உள்ளது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசி மையங்கள் செயல்படுகிறது. தமிழகத்தில் இதுவரை 4.43 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவேண்டும். பெரும்பாலான தொற்றுகள் குடும்ப நிகழ்வுகள் மூலம் வருகிறது.


latest tamil news


குறிப்பாக அரியலூர், கடலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் குடும்ப நிகழ்ச்சிகளால் நோய் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் பொழுது போக்கு இடங்களாக உள்ள நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களிலும் நாகை, விருதுநகர், மாவட்டங்களிலும் தொற்று அதிகளவில் உள்ளது. சென்னையில் பணி சார்ந்த நிகழ்ச்சிகள், பொழுதுபோக்குகள் போன்ற காரணங்களால் நோய் தொற்று சற்று அதிகமாக காணப்படுகிறது.

60 வயதை கடந்தவர்கள் 86 லட்சம் பேர் உள்ளனர். ஆனால், 41.78 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளனர். முதியவர்களுக்கு விரைவில் தடுப்பூசியை செலுத்த குடும்ப உறுப்பினர்கள் அவர்களை அழைத்து வரவேண்டும் . சென்னையில் வீடு தேடி முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது குறித்து ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதலை பின்பற்றியே நடவடிக்கை எடுக்கப்படும். பூஸ்டர் தொடர்பாக வரும் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம். செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழக அரசே ஏற்று நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு செய்து தருவதாக உறுதி அளித்துள்ளது. சிகிச்சைக்கு அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
27-செப்-202100:08:33 IST Report Abuse
Aarkay உங்கள் ஷர்ட் செலெக்ஷன் அருமை டிசைன் டிசைனாக போடுகிறீர்கள்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
26-செப்-202119:23:36 IST Report Abuse
Ramesh Sargam ஓகே நாங்கள் நம்பவில்லை. இருந்தாலும் நீங்கள், அதாவது அரசு, இப்படி வதந்தியை பரப்புவர்களை கண்டுபிடித்து தண்டிக்கலாம் இல்ல...??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X