இந்தியாவில் இருந்து நேரடி விமான சேவை: கனடா அனுமதி

Updated : செப் 26, 2021 | Added : செப் 26, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
ஒட்டாவா: கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை கனடா விலக்கிக் கொண்டது. நாளை(செப்.,27) முதல் நேரடியாக விமானங்களை இயக்க அந்நாட்டு அரசு அனுமதி வழங்கி உள்ளது.கோவிட் 2வது அலை காரணமாக, இந்தியாவில் இருந்து நேரடியாக விமானங்களை இயக்க கடந்த ஏப்ரல் மாதம் கனடா தடை விதித்தது. இந்த தடை பல முறை நீட்டிக்கப்பட்டது.இந்நிலையில், கனடா
கனடா, விமானங்கள், இந்தியா, டில்லி,

ஒட்டாவா: கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை கனடா விலக்கிக் கொண்டது. நாளை(செப்.,27) முதல் நேரடியாக விமானங்களை இயக்க அந்நாட்டு அரசு அனுமதி வழங்கி உள்ளது.

கோவிட் 2வது அலை காரணமாக, இந்தியாவில் இருந்து நேரடியாக விமானங்களை இயக்க கடந்த ஏப்ரல் மாதம் கனடா தடை விதித்தது. இந்த தடை பல முறை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், கனடா போக்குவரத்துத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: செப்.,27 முதல் இந்தியாவில் இருந்து நேரடியாக வரும் விமானங்கள் கனடாவில் தரையிறங்க அனுமதிக்கப்படுகிறது. கனடாவிற்கு விமானம் புறப்படுவதற்கு 18 மணி நேரத்திற்கு முன்னர் டில்லி விமான நிலையத்தில் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை மையங்களில் எடுக்கப்பட்ட கோவிட் மாலிகுலர் சோதனை சான்றிதழை பயணிகள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


latest tamil news


இந்த முடிவை வரவேற்று கனடாவிற்கான இந்திய தூதர் அஜய் பிசாரியா கூறியுள்ளதாவது: இரு நாடுகளுக்கு இடையிலான விமான சேவையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கை இதுவாகும். ஏர் இந்தியா மற்றும் ஏர் கனடா நிறுவனங்கள், இனிமேல் தினசரி டில்லி - டொரான்டோ மற்றும் வான்கூவர் இடையே விமானங்களை இயக்க முடியும். பயண கட்டுப்பாடுகளை இன்னும் எளிதாக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் இருந்து கனடாவிற்கு நேரடியாக இல்லாமல் வேறு மார்க்கமாக செல்பவர்கள், 3வது நாட்டில் இருந்து கிளம்புவதற்கு முன்னர் அங்கு எடுக்கப்பட்ட கோவிட் நெகட்டிவ் சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
26-செப்-202119:38:58 IST Report Abuse
Vittalanand தடுப்பூசி மட்டும் வேண்டுமா ?
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
26-செப்-202119:38:29 IST Report Abuse
Ramesh Sargam அடுத்து இந்திய மக்கள் விரும்புவது தளர்வுகளுடன் நேரடியான விமான சேவை அமெரிகாவிட்கு. நவம்பர் மாதத்தில் அப்படி நேரடியாக தளர்வுகளுடன் இந்திய மற்றும் பிற நாட்டு பிரயாணிகளை அனுமதிக்க அமெரிக்கா தெரிவித்திருக்கிறது. அது அக்டோபர் மாதத்திலேயே துவங்கினால் சிறப்பாக இருக்கும்.
Rate this:
Cancel
Naagarazan Ramaswamy - Chennai,இந்தியா
26-செப்-202118:35:11 IST Report Abuse
Naagarazan Ramaswamy 18 மணி நேரம் முன் என்பது மிக குறைவான நேரம். சில சமயங்களில் ரிபோர்ட் 24 மணி நேரத்தில்தான் கொடுக்கிறார்க்ல். அதனால் இந்த முன் சோதனை நேரத்தை 24 மணி யாக அதிகரிக்க அதிகாரிகள் ஆவந செய்யவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X