அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேலூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தல்: 316 பேர் போட்டியின்றி தேர்வு

Added : செப் 26, 2021
Share
Advertisement
வேலுார்: உள்ளாட்சி தேர்தலில், வேலுார் மாவட்டத்தில் 316 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.வேலுார் மாவட்டத்தில், 2,478 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. அதற்கு 8,170 பேர் போட்டியிட்டனர். 83 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 1,224 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர். 316 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 11 இடங்களில் வேட்பு மனுக்களை யாரும் தாக்கல் செய்யவில்லை.

வேலுார்: உள்ளாட்சி தேர்தலில், வேலுார் மாவட்டத்தில் 316 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
வேலுார் மாவட்டத்தில், 2,478 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. அதற்கு 8,170 பேர் போட்டியிட்டனர். 83 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 1,224 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர். 316 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 11 இடங்களில் வேட்பு மனுக்களை யாரும் தாக்கல் செய்யவில்லை. இதனால் 6,547 பேர் போட்டியிடுகின்றனர்.
14 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 93 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். 6 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 17 மனுக்கள் வாபஸ் பெற்றனர். 70 பேர் போட்டியிடுகின்றனர். 138 ஒன்றிய கவுன்சிலர் பதிவிக்கு 741 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். 12 மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 224 பேர் வாபஸ் பெற்றனர். 2 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 503 பேர் போட்டியிடுகின்றனர்.
247 பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 1,192 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். 13 மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 343 பேர் வாபஸ் பெற்றனர். 16 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 820 பேர் போட்டியிடுகின்றனர்.ஊராட்சி வார்டு உறுப்பினர் 2,079 பதவிகளுக்கு 6,144 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். 52 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டத, 640 பேர் வாபஸ் பெற்றனர். 298 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 5,154 பேர் போட்டியிடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X