பொது செய்தி

இந்தியா

எஸ்.பி.ஐ., போல நான்கைந்து வங்கிகள் நாட்டுக்கு தேவை: மத்திய நிதி அமைச்சர்

Updated : செப் 26, 2021 | Added : செப் 26, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
மும்பை: இந்திய வங்கிகள் சங்கத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவ எஸ்.பி.ஐ., போன்ற இன்னும் நான்கு அல்லது ஐந்து வங்கிகள் தேவை என்றார்.மும்பையில் இந்திய வங்கிகள் சங்கத்தின் 74வது ஆண்டு பொதுக் கூட்டம் நடைப்பெற்றது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அந்நிகழ்ச்சியில் பங்கேற்று

மும்பை: இந்திய வங்கிகள் சங்கத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவ எஸ்.பி.ஐ., போன்ற இன்னும் நான்கு அல்லது ஐந்து வங்கிகள் தேவை என்றார்.



latest tamil news



மும்பையில் இந்திய வங்கிகள் சங்கத்தின் 74வது ஆண்டு பொதுக் கூட்டம் நடைப்பெற்றது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அந்நிகழ்ச்சியில் பங்கேற்று வங்கியாளர்களிடம் பேசியதாவது: உடனடி மற்றும் எதிர்காலத்தில் இந்திய வங்கித் துறை எப்படி இருக்க வேண்டும் என்று கற்பனை செய்து பாருங்கள். டிஜிட்டல்மயமாக்கலை வெற்றிகரமாக ஏற்றுக்கொண்டுள்ள இந்திய வங்கித் துறை, இந்தியாவுக்கு மிகவும் தனித்துவமானதாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் இந்திய வங்கித் துறை டிஜிட்டல் மயமாக்கப்பட்ட செயல்முறைகளால் இயக்கப்படும். அதனை அடைய, இந்திய வங்கிகள் சங்கம், ஒவ்வொரு மாவட்ட, வங்கி கிளைகளை அதனதன் இருப்பிட வாரியாக மேப்பிங் செய்யும் படி அமைக்க வேண்டும்.
மூன்றில் 2 பங்கு பஞ்சாயத்துகளில் அதாவது 7.5 லட்சம் பஞ்சாயத்துகளில் ஆப்டிகல் பைபர் இணைப்பு பெற்றுள்ளன. வங்கிகள் சங்கம் இதனை கருத்தில் கொண்டு எங்கு நேரடி கிளை தேவை மற்றும் எங்கு எல்லாம் நேரடி கிளை இல்லாமலும் சேவை வழங்க முடியும் என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும். பொருளாதாரம் முற்றிலும் மாறுபட்ட பரப்பிற்குள் மாறுகிறது. அதனை தொழில்துறை ஏற்றுக்கொள்ளும் விதத்தைப் பொறுத்து பல புதிய சவால்கள் எழுகின்றன.


latest tamil news




இந்த சவால்களைச் சமாளிக்க நமக்கு அதிக வங்கிகள் மட்டுமில்லை, பெரிய வங்கிகளும் தேவை. இன்றைய பணப் பரிவர்த்தனை உலகில் இந்திய யு.பி.ஐ., மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
27-செப்-202101:25:46 IST Report Abuse
spr "இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவ எஸ்.பி.ஐ., போன்ற இன்னும் நான்கு அல்லது ஐந்து வங்கிகள் தேவை" அறியப்பட வேண்டியது "எஸ்.பி.ஐ., போன்ற இன்னும் நான்கு அல்லது ஐந்து வங்கிகள் தேவையா இல்லை எஸ்.பி.ஐ., போன்ற இன்னும் நான்கு அல்லது ஐந்து வங்கிகள் மட்டுமே தேவையா" என்பதே பண மதிப்பிழப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து இது போல பெரிய வங்கிகளை அரசு உருவாக்குமென்று முன்பு சொன்னேன் பணப் பரிமாற்றத்தை சட்டப்படி கண்காணிப்பது ஒரு பெரிய சவாலாக இருக்கையில் உலக அளவில் பெரிய வங்கிகளாக இந்திய வங்கிகள் இருந்தால் மட்டுமே சட்டப்படி பணப்பரிமாற்றம் நடக்க வாய்ப்பிருக்கிறது ஆனால் இந்திய வங்கிகளில் எஸ் பி ஐ தவிர அரசு நிர்வகிக்கும் பெரிய வங்கிகள் வேறில்லை என்பதால் பல சிறு வங்கிகள் ஒன்றிணைக்கப்பட்டு பெரிய வங்கிகளாக ஆக்கப்பட்டன இவை உலக அளவில் கிளைகளைத் திறக்க வேண்டும் இன்றைய நவீன உலகப் பொருளாதாரத்தில் வங்கிகள் ஒரு நாட்டை வல்லரசாக மாற்றுகின்றது. நிதிப் புழக்கம் என்பது எந்த நாட்டிற்கும் பொருளாதாரத்திற்கும் முதுகெலும்பாக விளங்குகிறது, இத்தகைய நிதிப் புழக்கத்திற்கு அந்த நாட்டில் உள்ள வங்கிகள் பெரும் பங்காற்றுகின்றன.உலகின் டாப் 10 தனியார் வங்கிகள்.. இந்திய வங்கிகளுக்கு இடமில்லயாம்.இது 2017 ல் வெளியானதோரு செய்தி உலக அளவில் கிளைகள் உள்ள இந்திய வங்கிகள் இருந்தால் மட்டுமே உலகளாவிய பணப்பரிமாற்றம் சட்ட விதிகளின்படி நடப்பது சாத்தியம் சென்னை போன்ற பெரு நகரங்களில் இவை போன்ற பெரிய வங்கிகள் சில மட்டுமே இருக்கும் அடுத்து வைசியா வங்கி போன்ற ஷெடியூல்டு வங்கிகள் திருச்சி நெல்லை போன்ற சிறு நகரங்களுக்கும் கூட்டுறவு வங்கிகள் கிராமங்களுக்கும் அனுப்பப்படும். மோடியின் அரசு திட்டமிட்டே காயை நகர்த்துகிறது ஆனால் ஊழலில் ஊறிப்போன எஸ் பி ஐ போன்ற வங்கிகளுக்கு உலக அளவில் மட்டுமல்ல பெரிய நகரங்களிலேயே நிர்வகிக்க இயலவில்லை அவை சலுகை முறையில் பணிக்கமர்த்தப்பட்ட திறமையற்ற ஊழியர்களை தண்டிக்கவோ குற்றம் செய்தவர்களைக் குறைந்த பட்சம் இடமாற்றம் செய்யவோ கூட இயலாததன் காரணம் அவை அரசு வங்கி என்பதாலும் வங்கி ஊழியர் சங்க ஆதரவும் காரணம் மல்லையா போன்றோருக்கு கடன் வழங்கிய முறைகேடுகளில் இதுவராய்ந்த வங்கி அதிகாரிகளும் விசாரிக்கப்பட்டனர் என்றோ தண்டிக்கப்பட்டனர் என்றோ எங்கேயாவது செய்தியுண்டா இனி ஊழல் உலகளாவிய அளவில் விஞ்ஞான முறையில் நடக்கும்
Rate this:
Cancel
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
26-செப்-202122:17:50 IST Report Abuse
Vittalanand சென்னை சேலையூர் வ யெஸ் பி ஐ க்கு போங்கள். சாதா மனிதனுக்கு கிடைக்கும் நிராதரவையும் தாய் பூட் டாகுலபாஜிக்கும் பேராதரவையும் ஒப்பிடுங்கள்.
Rate this:
Cancel
amuthan - kanyakumari,இந்தியா
26-செப்-202122:02:35 IST Report Abuse
amuthan ஹாஹா ஹாஹா ஏன். ஏழைகள் வங்கி கணக்கில் குறைந்த பட்ச பணம் இல்லை என்று இருப்பதையும் பிடுங்க வேண்டுமா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X