சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : செப் 26, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்பூஸ்டர் தடுப்பூசி தேவையாகொரோனா தடுப்பூசி இரண்டு 'டோஸ்' செலுத்திய பின் குறிப்பிட்ட நாட்களுக்குப்பின் பூஸ்டர் 'டோஸ்' செலுத்தப்பட வேண்டும் என பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் தெரிவிக்கப்படுகிறது. கர்நாடக தனியார் மருத்துவமனையில் நடத்திய ஆய்வில் கோவிஷீல்டு இரண்டு டோஸ் செலுத்தப்பட்ட 250 மருத்துவ பணியாளர்களில் 99 சதவீத பேருக்கு ஏழு

அறிவியல் ஆயிரம்

பூஸ்டர் தடுப்பூசி தேவையா


கொரோனா தடுப்பூசி இரண்டு 'டோஸ்' செலுத்திய பின் குறிப்பிட்ட நாட்களுக்குப்பின் பூஸ்டர் 'டோஸ்' செலுத்தப்பட வேண்டும் என பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் தெரிவிக்கப்படுகிறது. கர்நாடக தனியார் மருத்துவமனையில் நடத்திய ஆய்வில் கோவிஷீல்டு இரண்டு டோஸ் செலுத்தப்பட்ட 250 மருத்துவ பணியாளர்களில் 99 சதவீத பேருக்கு ஏழு மாதங்களுக்குப்பின்பும் குறிப்பிடத்தக்க எதிர்ப்பு சக்தி நீடிக்கிறது. 250 பேரில் 10 பேருக்கு மட்டுமே ஆன்டிபாடி குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பூஸ்டர் இப்போதைக்கு தேவையில்லை.

தகவல் சுரங்கம்

உலக சுற்றுலா தினம்


கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சுற்றுலா துறை பாதிக்கப்பட்டுள்ளது. பலர் வேலை, வருமான இழப்பை சந்தித்துள்ளனர். இது நாட்டின் வளர்ச்சியையும் பாதிக்கிறது. ஏனெனில் சுற்றுலா என்பது பொருளாதாரத்துடன் தொடர்புடையது. உலகில் பத்தில் ஒருவருக்கு சுற்றுலா மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. பல்வேறு கலாசாரத்தை அறிந்து கொள்ள, உலகை ஒருங்கிணைக்க, ஒற்றுமைக்கு வழிகாட்டியாக சுற்றுலா திகழ்கிறது. இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கில் செப்., 27ல் உலக சுற்றுலா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X