சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேங்காய் மஞ்சி ஏற்றி வந்த லாரி மீது மின் கம்பி உரசி தீ விபத்து ரூ.10 லட்சம் சேதம்

Added : செப் 26, 2021
Share
Advertisement
காங்கேயம்:காங்கேயம் அருகே அருகே தேங்காய் மஞ்சி பாரம் ஏற்றி வந்த லாரி மீது மின் கம்பி உரசியதால் தீ விபத்து 10 லட்சம் மதிப்பில் சேதம் அடைந்துள்ளது.ஈரோடு மாவட்டம், பூந்துறையில் இருந்து நத்தக்காடையூர் வழியாக திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே பாப்பினி பகுதியில் உள்ள ஒரு தனியார் கயிறு கம்பெனிக்கு நேற்று தேங்காய் மஞ்சி பாரம் ஏற்றி கொண்டு ஒரு லாரி புறப்பட்டு வந்தது.
 தேங்காய் மஞ்சி ஏற்றி வந்த லாரி மீது மின் கம்பி உரசி தீ விபத்து ரூ.10 லட்சம் சேதம்

காங்கேயம்:காங்கேயம் அருகே அருகே தேங்காய் மஞ்சி பாரம் ஏற்றி வந்த லாரி மீது மின் கம்பி உரசியதால் தீ விபத்து 10 லட்சம் மதிப்பில் சேதம் அடைந்துள்ளது.
ஈரோடு மாவட்டம், பூந்துறையில் இருந்து நத்தக்காடையூர் வழியாக திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே பாப்பினி பகுதியில் உள்ள ஒரு தனியார் கயிறு கம்பெனிக்கு நேற்று தேங்காய் மஞ்சி பாரம் ஏற்றி கொண்டு ஒரு லாரி புறப்பட்டு வந்தது. ஈரோடு மாவட்டம், அனுமன்பள்ளி அருகே உள்ள சென்னிப்பாளி பகுதியை சேர்ந்த தாமோதரன்(30) என்பவர் வேனை ஒட்டி வந்தார்.

மதியம் சுமார் 12.30 மணியளவில் மூலக்கடை பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்த போது லாரியில் இருந்த தேங்காய் மஞ்சி பாரம் மேலே செல்லும் மின்சார கம்பிகள் மீது எதிர்பாராத விதமாக உரசி உள்ளது. இதை பார்த்த ஓட்டுநர் தாமோதரன் உடனடியாக லாரியை நிறுத்தி கீழே இறங்கி வந்து பார்த்த போது மஞ்சி பாரம் தீ பிடித்து கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

இதுகுறித்து காங்கேயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த காங்கேயம் தீயணைப்பு நிலைய அதிகாரி ம.சுப்பிரமணியன் தலைமையில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்பு நிலைய வாகனத்தின் ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்க போராடினர். பின்னர் இரண்டு மணிநேர போராட்டத்திற்கு பின் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த தீ விபத்தில் ஓட்டுநர் தாமோதரன் எவ்வித காயங்களும் இன்றி உயிர் தப்பினார். இருப்பினும் தீ விபத்தில் லாரி மற்றும் லாரியில் இருந்த தேங்காய் மஞ்சி என ரூ.10 லட்சம் மதிப்பில் தீயில் கருகி நாசமானது. இந்த தீ விபத்து குறித்து காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் வேனில் தீ பிடித்து எறிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X