பொது செய்தி

தமிழ்நாடு

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 79,433 பேர் போட்டி: மாநில தேர்தல் ஆணையம்

Updated : செப் 26, 2021 | Added : செப் 26, 2021
Share
Advertisement
சென்னை: செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், 79,433 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்றும் 2,981 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர் எனவும் தமிழக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இரண்டு கட்டம்செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி, திருப்பத்தூர், வேலூர் உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல்

சென்னை: செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், 79,433 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்றும் 2,981 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர் எனவும் தமிழக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.



latest tamil news





இரண்டு கட்டம்


செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி, திருப்பத்தூர், வேலூர் உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிறது 6-ந்தேதி, 9-ந்தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.


latest tamil news




உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந்தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் 22-ந்தேதியுடன் முடிவடைந்தது. நேற்று வேட்பு மனுவை வாபஸ் கடைசி நாளாகும்.இந்த நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி 23,988 பதவிகளுக்கு 79,433 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 14,571 பேர் மனுவை வாபஸ் பெற்றுள்ளனர். 2,981 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர் . இவ்வாறு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X