பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் பணியாளர்களுக்கு சிற்றுண்டி

Added : செப் 26, 2021
Share
Advertisement
கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாம் நடைபெற்ற மையங்களில் பணியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள், ஆசிரியர்கள் தன்னார்வ தொண்டர்களுக்கு காலை சிற்றுண்டியினை காட்பாடி ரெட்கிராஸ் சார்பில் 3வது முறையாக அவைத்தலைர் செ.நா.ஜனார்த்தனன் தலைமையில் செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு துணைத்தலைவர்கள் ஆர்.சீனிவாசன், ஆர்.விஜயகுமாரி இந்திய மருத்துவ சங்கத்தின்
 கொரோனா நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் பணியாளர்களுக்கு  சிற்றுண்டி

கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாம் நடைபெற்ற மையங்களில் பணியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள், ஆசிரியர்கள் தன்னார்வ தொண்டர்களுக்கு காலை சிற்றுண்டியினை காட்பாடி ரெட்கிராஸ் சார்பில் 3வது முறையாக அவைத்தலைர் செ.நா.ஜனார்த்தனன் தலைமையில் செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு துணைத்தலைவர்கள் ஆர்.சீனிவாசன், ஆர்.விஜயகுமாரி இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் மருத்துவர் வீ.தீனபந்து ஆகியோர் காட்பாடி காந்திநகர் தடுப்பூசி முகாமில் உள்ளவர்களுக்கு வழங்கினார்கள்.
தாராபடவேடு நகர்புற சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஆர்.அகிலா மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் டாக்டர் வீ.தீனபந்து, எ.ஶ்ரீதரன் ஜெயின், ஆர்.ராதாகிருஷ்ணன், தணிகை ஜி.செல்வம், திருமகள் செல்வமணி, எஸ்.ஜே.சோமசுந்தரம், மோதகப்பிரியன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். தாராபடவேடு நகர்புற சுகாதார நிலைய பகுதியில் உள்ள 20 சிறப்பு மையங்களில் உள்ள 150 பேருக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது.

தடுப்பூசி மையங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வின காட்பாடி ரெட்கிராஸ் தொண்டர்களும், தமிழ்நாடு அறிவியல் இயக்க தொண்டர்களும் ஏற்படுத்தினர்.
காலை 7 மணி முதல் செயல்படும் மையங்களில் அச்சமின்றி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வருவாய், உள்ளாட்சி அமைப்புகள், (கிராம மற்றும் நகர), கல்வித்துறை, பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் ரெட்கிராஸ் அமைப்புகளுடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உரிய ஆலோசனைகளை வழங்கியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X