'நீதித்துறையில் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வேண்டும்': தலைமை நீதிபதி

Updated : செப் 26, 2021 | Added : செப் 26, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
புதுடில்லி:“நீதித்துறையில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்; அதேபோல் சட்டக் கல்லூரியிலும் அதே அளவுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்,” என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசினார். 30 சதவீதம்உச்ச நீதிமன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பெண் நீதிபதிகள் மற்றும் பெண் வழக்கறிஞர்களுக்கான பாராட்டு விழா டில்லியில் நேற்று நடந்தது.

புதுடில்லி:“நீதித்துறையில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்; அதேபோல் சட்டக் கல்லூரியிலும் அதே அளவுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்,” என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசினார்.



latest tamil news




30 சதவீதம்

உச்ச நீதிமன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பெண் நீதிபதிகள் மற்றும் பெண்
வழக்கறிஞர்களுக்கான பாராட்டு விழா டில்லியில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிஎன்.வி.ரமணா பேசியதாவது:

நீதித்துறையிலும், சட்டக் கல்லூரியிலும் இடஒதுக்கீடு கேட்பதற்கு பெண்களுக்கு உரிமை உள்ளது. நீதித்துறையில் தற்போது 30 சதவீதத்துக்கும் குறைவாகத்தான் பெண்கள் உள்ளனர்.
உயர் நீதிமன்றங்களில் 11.5 சதவீதமும், உச்ச நீதிமன்றத்தில் 11 - 12 சதவீதமும் மட்டுமே பெண்கள் உள்ளனர். தேசிய வழக்கறிஞர்கள் கவுன்சில் நிர்வாகக் குழுவில் ஒரு பெண் கூட இல்லை.நாட்டில் 17 லட்சம் வழக்கறிஞர்கள் உள்ளனர். அதில் 15 சதவீதம் மட்டுமே பெண்கள்.

அதேபோல் நாடு முழுதும் உள்ள வழக்கறிஞர்கள் கவுன்சிலில் 2 சதவீத பெண்கள் மட்டுமே
நிர்வாகிகளாக உள்ளனர். பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உடனடியாக சட்ட திருத்தம் செய்ய வேண்டியது அவசியம்.


latest tamil news




உலக மகள்கள் தினம்

காரல் மார்க்ஸ் 'உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்; உங்களை மாற்றியமைக்கிறேன்; நீங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை' என, அழைப்பு விடுத்தார். அதேபோல் 'உலக பெண்களே ஒன்று சேருங்கள்' என, நான் அழைப்பு விடுக்கிறேன்.பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு சில சங்கடங்கள் இருக்கின்றன. அவற்றை மாற்ற முயற்சிக்கிறேன். இன்று உலக மகள்கள் தினம். இது அமெரிக்க பண்பாடு என்றாலும், நல்ல விஷயத்தை கொண்டாடுவோம்.இவ்வாறு அவர்
பேசினார்.



அடுத்த அலை வராது என நம்புவோம்

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுதும் நீதிமன்றங்கள் 2020 மார்ச்சில் மூடப்பட்டன. தாக்கம் குறைந்த நிலையில் தற்போது 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக தற்போது விசாரணை நடந்து வருகின்றன. சில நீதிமன்றங்களில் மட்டுமே நேரடி விசாரணை நடக்கிறது.

இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, “கொரோனா அடுத்த அலை உருவாகாது என்று நம்புவோம். தசரா விடுமுறைக்கு பின்,
உச்ச நீதிமன்றம் உட்பட அனைத்து நீதிமன்றங்களும் தகுந்த பாதுகாப்பு முறையுடன் வழக்கம் போல் இயங்கும் என எதிர்பார்போம்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
27-செப்-202115:42:58 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan பாவம். ஓய்வுக்குப்பின் அரசியலுக்கு வர இப்போதே முன்னுரை ஏழுதியுள்ளார். வெட்கக்கேடு
Rate this:
Cancel
விசு பாய் , சென்னை அய்யா பழைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளை மிஞ்சி விட்டார். தினமும் ஒரு கூட்டம் அதில் ஒரு அறிக்கை. அரசியல்வாதி தோற்றான்.
Rate this:
Cancel
Paraman - Madras,யூ.எஸ்.ஏ
27-செப்-202108:45:11 IST Report Abuse
Paraman இது போன்ற கே....தனமான அறிக்கைகளை விடுவதற்கு பதில் தினமும் நிலுவையில் இருக்கும் வழக்குகள் முடிக்கப்பட வேண்டும் அல்லது நீதிமன்ற பார்வைக்கு எடுத்து கையாளப்பட வேண்டும் என்று ஒவ்வெரு நீதிபதி, நீதிமன்றத்துக்கும் 'வழக்குகளை' ஒதுக்கீடு செய்து அவற்றின் முடிவுகள், தரவுகள் போன்ற விஷயங்களை மேற்பார்வை செய்யும் வேலைகளை உங்களுக்கும் ஒதுக்கீடு செய்யுங்கள் முதலில் பிறகு இந்த வேலையற்ற ஒதுக்கீடுகள் பற்றி வெத்து அறிக்கைகள் விடலாம். இந்தியாவில் மேலிருந்து கீழ்வரைக்கும் அனைவரும் வேலை வெட்டி இல்லாமல் இருப்பவர்களாக தான் இருக்கிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X