பொது செய்தி

இந்தியா

எச்சரிக்கை!தடுப்பூசி போட்டாலும் கட்டுப்பாடுகள் முக்கியம்:பண்டிகை நெருங்குவதால் பிரதமர் வலியுறுத்தல்

Updated : செப் 28, 2021 | Added : செப் 26, 2021 | கருத்துகள் (3+ 12)
Share
Advertisement
புதுடில்லி: ''அனைத்து மக்களும் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பு வட்டத்திலிருந்து வெளியேறவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டியது நம் கடமை. தடுப்பூசி போட்டுக் கொண்டாலும், கொரோனா கட்டுப்பாடுகளை கைவிடாமல் பண்டிகைகளை மக்கள் கொண்டாட வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிற்றுக்கிழமை யன்று வானொலியில், 'மன் கி பாத்' எனப்படும் மனதின்
எச்சரிக்கை!தடுப்பூசி போட்டாலும் கட்டுப்பாடுகள் முக்கியம்:பண்டிகை நெருங்குவதால் பிரதமர் வலியுறுத்தல்

புதுடில்லி: ''அனைத்து மக்களும் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பு வட்டத்திலிருந்து வெளியேறவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டியது நம் கடமை. தடுப்பூசி போட்டுக் கொண்டாலும், கொரோனா கட்டுப்பாடுகளை கைவிடாமல் பண்டிகைகளை மக்கள் கொண்டாட வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிற்றுக்கிழமை யன்று வானொலியில், 'மன் கி பாத்' எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசி வருகிறார். இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று, 81-வது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.

அவர் கூறியதாவது:நாட்டில் பண்டிகை காலம் நெருங்கி வருகிறது. தசரா, துர்கா பூஜை, தீபாவளி என வரிசையாக பண்டிகைகள் வர உள்ளன. துஷ்ட சக்தியை அழித்த ஸ்ரீராமரை விஜய தசமியன்று வழிபடும் போது, கொரோனாவுக்கு எதிராக நாம் போராடி வென்றதை நினைவில் கொள்ள வேண்டும்.தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா பல்வேறு சாதனைகளை தினமும் நிகழ்த்தி வருகிறது. இந்தியாவின் பல்வேறு சாதனைகளை உலகமே பேசி வருகிறது.
கொரோனா பரவல் தடுப்பில் தடுப்பூசி முக்கிய பங்காற்றி வருகிறது. நம்முடைய முறை வரும் போது நாம் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியது அவசியம்.


வெற்றிக்கொடிஅது மட்டுமின்றி, தடுப்பூசி பாதுகாப்பு வளையத்தை விட்டு ஒருவரும் வெளியேறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியதும் நம் கடமை. தடுப்பூசி போட்டுக் கொள்ளாத நம் உறவினர்கள், அக்கம் பக்கத்தினரை உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வலியுறுத்துவதுடன், அவர்கள் தடுப்பூசி போட்டதை உறுதி செய்ய வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடித்து, பண்டிகை களை கொண்டாட வேண்டும். கொரோனாவை வென்று நம் வெற்றிக் கொடியை விரைவில் உயர்த்துவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் தீன்தயாள் உபாத்யாய் பிறந்த நாளில், 'ஆயுஷ்மான் பாரத்' காப்பீடு திட்டத்தை துவங்கினோம். உலகிலேயே மிகப்பெரிய சுகாதாரத் திட்டமாக இது கருதப்படுகிறது.தீன்தயாளின் ஏழைகளுக்கான கொள்கைக்கு இந்த திட்டத்தை அர்ப்பணிக்கிறோம்.

காதி மற்றும் கைத்தறி ஆடைகளின் தயாரிப்பும், விற்பனையும் தற்போது அதிகரித்துள்ளது. காதி பொருட்களை வாங்கி, வரும் 2ம் தேதி மஹாத்மா காந்தி பிறந்த நாளை கொண்டாடுவோம். சுதந்திர கனவுடன், துாய்மையை தொடர்பு படுத்தினார் மஹாத்மா காந்தி. சுதந்திர போராட்டத்தில் துாய்மை பிரசாரம் ஆற்றிய முக்கிய பங்கை இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சுற்றுப்புறங்களை துாய்மையாக வைத்துக் கொள்வது தான், அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி.

கிராமப்புறங்களிலும் மின்னணு பணப் பரிவர்த்தனை தற்போது அதிகரித்து உள்ளது. இதன் வாயிலாக, நாட்டின் பொருளாதாரத்தில் வெளிப்படைத் தன்மை ஏற்பட்டு உள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் 350 கோடிக்கும் மேற்பட்ட பணப் பரிவர்த்தனைகள் 'டிஜிட்டல்' முறையில் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.


மாற்றுத் திறனாளிகள்சியாச்சின் பனி மலையில் குளிர் எவ்வாறு இருக்கும்? இங்கு சாமானிய மக்கள் வாழ்வது கடினம் என்பது நமக்கு தெரியும்.மாற்றுத் திறனாளிகள் எட்டு பேர் சேர்ந்து 15 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள சியாச்சின் பனி மலையில் ஏறி, தேசியக் கொடியை ஏற்றி சாதனை படைத்துள்ளனர். இவர்களின் சாதனை தேசத்துக்கே ஊக்கமாக அமைந்து உள்ளது. உத்தரகண்டைச் சேர்ந்த மகேஷ் நெஹ்ரா, தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் துவார்கேஷ் உள்ளிட்டோர் இந்த சாதனையை படைத்துஉள்ளனர். இவ்வாறு மோடி பேசினார்.


வேலுார், திருவண்ணாமலை பெண்களுக்கு பாராட்டு'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மேலும் பேசியதாவது: செப்., 26ம் தேதி உலக நதிகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. நமக்கு தண்ணீர் வழங்கும் நதிகளுக்கு நாம் அளிக்க வேண்டிய பங்களிப்பு குறித்து நினைவுகூர வேண்டிய நாள். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஆண்டுக்கு ஒருமுறையாவது நதிகள் திருவிழாவை கொண்டாட வேண்டும். நதி நீர், நாட்டிற்கு மிக முக்கியம். அதை பாதுகாக்க வேண்டியது இன்றியமையாதது. கூட்டு முயற்சி வாயிலாக ஆறுகளை மாசு இல்லாததாக மாற்ற முடியும்.

கங்கையைப் போற்றுவோம் திட்டம் இப்போது வெற்றிகரமான திட்டமாக மாறியுள்ளது. நதிகளை பெண் தெய்வமாகக் கருதி வழிபடுவது நம் பண்பாடு. கங்கை, யமுனை, காவிரி உள்ளிட்ட நதிகளில் நீராடுவது மிகவும் புனிதமாக கருதப்படுகிறது.

தமிழகத்தின் திருவண்ணாமலையில் நாகநதி உள்ளது. ஒரு காலத்தில் தண்ணீர் நிரம்பி காணப்பட்ட இந்த நதி, சில ஆண்டுகளுக்கு முன் வறண்டது. வேலுார், திருவண்ணாமலை பெண்கள் குழுவினர் ஒன்று சேர்ந்து, தடுப்பணைகள் அமைத்தல் மற்றும் நிலத்தடி நீர் சேகரித்தல் என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இதன் பலனாக அந்த நதி உயிர் பெற்று தற்போது தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இது பெருமை அளிக்கிறது. தமிழக சகோதரிகள் போல், நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள மக்களும், வறண்டு போன நதிகளை மீட்டெடுக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (3+ 12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-செப்-202117:13:48 IST Report Abuse
அப்பாசாமி பண்டிகைக் காலத்தில் சொகுசு விமானத்தில் எஸ்கேப் ஆயிடுங்க. நாங்க இங்கே முடக்கப்படுவோம்.
Rate this:
Cancel
27-செப்-202114:49:29 IST Report Abuse
அப்புசாமி எதுக்கும் ஒரு தடவை கைதட்டி, விளக்கேத்தி பாத்துடலாமே... இந்த முறை கொரோனா பரவாது.
Rate this:
Cancel
Suri - Chennai,இந்தியா
27-செப்-202112:01:25 IST Report Abuse
Suri தனக்கு தானே தனியே இப்படி பேசிக்கொள்வது என்ன மாதிரி மனநோய்? பொது பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்ப்பது ஏன்? அவ்வளவு பயமா? தன்னம்பிக்கையே இல்லாத ஆட்களை பொறுப்பில் உட்கார வைத்தால் இது தான் நடக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X