நக்சல் தடுப்பு நடவடிக்கை: அமைச்சர் அமித் ஷா ஆய்வு

Updated : செப் 28, 2021 | Added : செப் 26, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி:நக்சலைட் பாதிப்புள்ள பகுதிகளில் தீவிர தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளுதல் மற்றும் அவர்களுக்கான நிதி ஆதாரங்களை தடுப்பது குறித்து, ஆறு மாநில முதல்வர்களுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு மேற்கொண்டார். தெலுங்கானா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்டுகளின் நடவடிக்கை கள் அதிகம் இருந்தன. மத்திய - மாநில அரசுகளின் தீவிர
நக்சல் தடுப்பு நடவடிக்கை:  அமைச்சர் அமித் ஷா ஆய்வு

புதுடில்லி:நக்சலைட் பாதிப்புள்ள பகுதிகளில் தீவிர தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளுதல் மற்றும் அவர்களுக்கான நிதி ஆதாரங்களை தடுப்பது குறித்து, ஆறு மாநில முதல்வர்களுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு மேற்கொண்டார்.

தெலுங்கானா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்டுகளின் நடவடிக்கை கள் அதிகம் இருந்தன. மத்திய - மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கைகளால் இவர்களின் ஆதிக்கம் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. தற்போது 45 மாவட்டங்களில் மட்டுமே நக்சல்களின் நடவடிக்கைகள் தொடர்கின்றன. இவற்றை ஒடுக்குவதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள், அவர்களுக்கான நிதி ஆதாரங்களை தடுத்தல் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டில்லியில் ஆய்வு கூட்டம் நடந்தது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:நாட்டின் சில மாநிலங்களில் நக்சல் செயல்பாடுகளை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்வது, அவர்களுக்கான நிதி ஆதாரங்களை தடுப்பது மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்மட்ட ஆய்வு கூட்டம் நடந்தது. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், ம.பி., முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பங்கேற்கும்படி மேற்கு வங்கம், சத்தீஸ்கர், ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கு மாற்றாக உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அவர்களிடம், நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கான மாநிலங்களின் தேவைகள், பாதுகாப்பு படைகளின் கட்டமைப்பு, நக்சல் பாதிப்புள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சாலை, பள்ளி, சுகாதார மையம் உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அமைச்சர் அமித் ஷா கேட்டறிந்தார்.

நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் அமலாக்க இயக்குனரகம், தேசிய புலனாய்வு பிரிவு மற்றும் மாநில போலீசார் இணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது. நக்சல்கள் அதிகமுள்ள மாவட்டங்களில், கட்டுப்பாட்டு வழிமுறைகள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. அப்பகுதிகளில் தொலைத்தொடர்பு வசதியை அதிகரிப்பது, மத்திய அரசின் 'ஏக்லாவ்யா' பள்ளிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
27-செப்-202113:52:27 IST Report Abuse
jayvee தமிழகத்தில் உள்ள அப்படிப்பட்ட மீடியா மற்றும் பத்திரிக்கை, கல்லூரிகள், NGO க்கள் என்ற போர்வையில், லெட்டர் பேட் கட்சிகள் இவைகளில் பல அர்பன் நக்சல்கள் ஒளிந்துள்ளனர் .. இவர்களையும் துடைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X