மோடி வந்தால் தான் ஊசி போடுவோம்: அடம் பிடிக்கும் பழங்குடியின தம்பதி

Updated : செப் 27, 2021 | Added : செப் 26, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
போபால்:மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு மலைக் கிராமத்தில், 'கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுமென்றால் பிரதமர் மோடி வர வேண்டும்' என பழங்குடியின தம்பதி அடம்பிடித்ததால் மருத்துவ ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.ம.பி.,யில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.பிடிவாதம்இம்மாநிலத்தில் அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்துவதை
மோடி வந்தால் தான் ஊசி போடுவோம்: அடம் பிடிக்கும் பழங்குடியின தம்பதி

போபால்:மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு மலைக் கிராமத்தில், 'கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுமென்றால் பிரதமர் மோடி வர வேண்டும்' என பழங்குடியின தம்பதி அடம்பிடித்ததால் மருத்துவ ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ம.பி.,யில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.


பிடிவாதம்

இம்மாநிலத்தில் அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்துவதை இலக்காக வைத்து தீவிர முகாம்கள் நடத்தப்படுகின்றன. இங்குள்ள தார் மாவட்டத்தில் கிகார்வாஸ் என்ற கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இங்கு வசிக்கும் ஒரு தம்பதியை தவிர அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுஉள்ளது. மருத்துவ ஊழியர்கள் நேற்று அந்த கிராமத்துக்கு சென்றனர்.

ஆனால் அந்த தம்பதி, தாங்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென்றால் யாராவது பெரிய அதிகாரிகள் வர வேண்டும் என அடம் பிடித்தனர். அதிலும், கணவர் இதில் ரொம்பவே பிடிவாதமாக இருந்தார். 'கலெக்டரை வர சொல்லட்டுமா' எனக் கேட்டதற்கு, 'பிரதமர் நரேந்திர மோடி தான் வர வேண்டும். அவர் முன்னிலையில் தான் தடுப்பூசி போட்டுக் கொள்வேன்' என, அவர் கண்டிப்புடன் கூறினார்.


ஏமாற்றம்

இதைக் கேட்டு மருத்துவ ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, ஒருங்கிணைப்பாளர் மனோஜ் துபே அந்த கிராமத்துக்கு வந்து பேசிப் பார்த்தார். ஆனால் அவர் விடாப்பிடியாக இருந்தார். இதையடுத்து, மருத்துவ ஊழியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-செப்-202107:32:44 IST Report Abuse
அப்புசாமி சொல்ல முடியாது. ஏழைப்பங்காளர் வந்தாலும் வந்திருவார். பயங்கர பி.ஆர் விஷயமாச்சே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X