அதிக கிளைகளை துவக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தல்

Updated : செப் 28, 2021 | Added : செப் 26, 2021 | கருத்துகள் (4+ 20)
Share
Advertisement
மும்பை:''நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் அதிகம் உள்ள பகுதிகளில் கிளைகளை துவங்க வங்கிகள் முன்வர வேண்டும்,'' என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் 74வது ஆண்டு பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய தாவது:இந்தியாவின் பொருளாதாரம் மற்றும்
அதிக கிளைகளை துவக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தல்

மும்பை:''நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் அதிகம் உள்ள பகுதிகளில் கிளைகளை துவங்க வங்கிகள் முன்வர வேண்டும்,'' என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் 74வது ஆண்டு பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய தாவது:இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் தொழில்துறை வளர்ச்சி அடைந்து வருகிறது. எதிர்காலத்தில் வங்கித் துறை எப்படி செயல்பட வேண்டும் என்பதை, தொழில் துறையினர் முன்கூட்டியே தீர்மானிக்க வேண்டும்.

வங்கிகள் 'டிஜிட்டல்' மயமாவது தவிர்க்க முடியாத ஒன்று. வங்கிகளின் எதிர்கால வளர்ச்சிக்கான தடையற்ற செயல்பாடுகளுக்கு இது மிக அவசியம்.ஆனால் வங்கிகள் இல்லாத மாவட்டங்கள் தற்போதும் உள்ளன. வங்கிகளின் செயல்பாடு முழுமை அடைய வேண்டுமெனில், பொருளாதார நடவடிக்கைகள் அதிகம் உள்ள பகுதிகளில், தங்கள் இருப்பை அவர்கள் உறுதி செய்ய வேண்டும்.

நிதித்துறை கொள்கைகளை உருவாக்கியவர்கள் 2,000த்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் அனைத்து கிராமங்களிலும் வங்கிகள் தேவை என இலக்கு நிர்ணயித்தனர். ஆனால் இன்றும் பல பெரிய பஞ்சாயத்துகளில் வங்கி கிளைகள் இல்லை. ஒரு வங்கியும் இல்லாத மாவட்டங்களும் உள்ளன. அப்பகுதிகளில் விவசாய விளைபொருட்கள் விற்பனையால் கிடைக்கும் தொகையை பாதுகாக்க, மக்கள் நீண்ட துாரம் பயணிக்க வேண்டியதாக உள்ளது. இதற்காகவே புதிய வங்கி கிளைகள் திறப்பிற்கான விதிகளை ரிசர்வ் வங்கி தளர்த்தியது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (4+ 20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
27-செப்-202120:10:45 IST Report Abuse
Indhuindian The Finance Minister should clarify whether ஷி has an account with SBI? Customer service is an anathema to SBI
Rate this:
Cancel
தத்வமசி - சென்னை ,இந்தியா
27-செப்-202113:55:22 IST Report Abuse
தத்வமசி நாட்டின் வளர்ச்சியில் வங்கிகளின் பங்கு இன்றியமையாதது. பாரத ஸ்டேட் வங்கி போன்று பெரிய வங்கிகள் பல வேண்டும். அதே சமயம் பலமான வங்கிகளாக இருத்தல் வேண்டும். ஆனால் அதற்கு முதல் உதாரணமாக காட்டக்கூடிய பாரத ஸ்டேட் வங்கி அமைந்துள்ளதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். தனியார் வங்கிகளின் சேவையில் இருபது சதவிகிதத்தை கூட இவர்கள் எட்டவில்லை. வேலை பளு எங்கு தான் இல்லை. சரியான பாதையில் அரசு வங்கிகள் செல்கிறதா என்றால் இல்லை என்றே நான் சொல்வேன். அதற்கு காரணம் பல பல. முதல் காரணம் வேலை கிடைக்கும் வரை வேகமாக இருத்தல், வங்கி வேலை கிடைத்தவுடன் ஆமை அல்ல நத்தை கூட வென்று விடும். அலட்சியம், திறமையை வெளிக்காட்டாமல் இருத்தல், ஆளைப் பார்த்து வேலை செய்தல், பொறுப்பற்ற தன்மை போன்றவை தானாகவே வந்து விடுகிறது. அதற்கு காரணமும் உண்டு. உள்ளே நுழைந்து விட்டால் குறிப்பட்ட நாட்களுக்கு பிறகு பெர்மனட் ஆகி விடுவார், சம்பளம் தானவே வந்து விழப் போகிறது, தவறுகளுக்கு எந்த விசாரணை, தண்டனை கிடையாது, பதவி உயர்வு தானாகவே வரப்போகிறது, அப்ரைசல் என்பது பெயருக்கு மட்டுமே. மற்றும் தெரிந்த மற்றும் தெரியாத பல லாபங்கள் மட்டுமே. தவறுகளில் பொறுப்பு, அதற்கு விசாரணை, தண்டனை என்று எதுவும் கிடையாது. ஆனால் தனியார் வங்கிகளில் இந்த நிலைமை கிடையாது. எல்லாமே தலைகீழ்.
Rate this:
Cancel
K.n. Dhasarathan - chennai,இந்தியா
27-செப்-202110:18:10 IST Report Abuse
K.n. Dhasarathan சுந்தர மூர்த்தி, சென்னை . சொல்வது முற்றிலும் நிஜம், சும்மா வங்கி கிளைகளை திறந்தாள் போதுமா? நிஜமான சேவை வேண்டாமா? கஸ்டமர்களை எப்படியெல்லாம் துன்புறுத்துவது, கஷ்டப்படுத்துவது என்பதில் எஸ் பி ஐ வங்கி ஒரு மாஸ்டர்.மேலும் மினிமம் பாலன்ஸ், எ டீ ம் மில் பணம் எடுக்க ஆயிரம் கட்டுப்பாடு, விதிகள் பிறகு எப்படி வங்கி வளரும்? மக்கள் பாவம் வேறு வழியில்லாமல் பேருக்குத்தான் கணக்கு வைத்திருக்கிறார்கள். இது தெரியுமா நிதி அமைச்சருக்கு? ஒன்று செய்யுங்களேன்? எஸ் பி ஐ யை தனியாருக்கு வித்துருங்களேன்? எப்பவாவது உருப்படுமா பார்க்கலாம், நீங்கள்தான் விக்கிரத்திலே எஸ்பிர்ட் ஆச்சே .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X