அரசியல் செய்தி

தமிழ்நாடு

'கிராமப்புற பொருளாதார மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் தருகிறது மத்திய அரசு'

Updated : செப் 28, 2021 | Added : செப் 26, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:''தேசிய அளவில், கிராமப்புற பொருளாதார மேம்பாட்டிற்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது,'' என, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் முருகன் கூறினார். மத்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் சார்பில், சென்னையை அடுத்த தாம்பரம், 'மெப்ஸ்' பொருளாதார மண்டல வளாகத்தில், வர்த்தக வார விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. இதில்
'கிராமப்புற பொருளாதார மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் தருகிறது மத்திய அரசு'

சென்னை:''தேசிய அளவில், கிராமப்புற பொருளாதார மேம்பாட்டிற்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது,'' என, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் முருகன் கூறினார்.

மத்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் சார்பில், சென்னையை அடுத்த தாம்பரம், 'மெப்ஸ்' பொருளாதார மண்டல வளாகத்தில், வர்த்தக வார விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற, மத்திய இணை அமைச்சர் முருகன் பேசியதாவது:

பிரதமர் மோடியின் ஆட்சியில், சர்வதேச அளவில் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக, நம் நாடு அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. இந்தாண்டு வ.உ.சி.,யின், 150வது பிறந்த நாள் விழாவை கொண்டாடுகிறோம். அவர், தன் சொத்துக்களை எல்லாம் விற்று ஆங்கிலேயருக்கு எதிராக சுதேசி கப்பலை இயக்கியவர்.அவரின் வழியில் மோடி தலைமையிலான அரசு, உள்ளூர் தொழில்களை ஊக்குவிக்கும் விதமாக, பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

கால்நடை மற்றும் கடல்சார் பொருட்கள் ஏற்றுமதிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. நாட்டின் வேளாண் ஏற்றுமதியில், 17 முதல் 18 சதவீதம் வரை, கடல்சார் ஏற்றுமதியின் பங்களிப்பு உள்ளது. உள்ளூர் தொழில்களை மேம்படுத்தும் வகையில், மத்திய அரசு, 'சுயசார்பு பாரதம்' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தேசிய அளவில் தமிழகம் ஏற்றுமதியில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

தமிழகத்தின் ஏற்றுமதி மேம்பாட்டுக்கு தேவையான, அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தரும். சென்னையில் இருந்து கார் மற்றும் உதிரி பாகங்கள்; நாமக்கல் பகுதியில் கால்நடை சார்ந்த பொருட்கள்; துாத்துக்குடியில் இருந்து கடல்சார் பொருட்கள் அதிகம் ஏற்றுமதியாகின்றன.கிராமப்புறங்களில் இருந்தும் ஏற்றுமதி செய்ய முடியும்.

இத்தகைய ஏற்றுமதி அதிகரிக்கும்போது, கிராம பொருளாதாரம் வளரும். அதன் வாயிலாக, கிராமங்கள் வளர்ச்சி அடைவதுடன் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.நம் நாட்டில் தயாரிக்கப் படும் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாக வேண்டும். கிராமப்புற பொருளாதார மேம்பாட்டுக்கு, மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.

நாட்டிலேயே முதல்முறையாக, தமிழகத்தில் கடல்பாசி பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதனால், மீனவ பெண்கள், மகளிர்சுய உதவி குழுக்கள், விவசாய உற்பத்தியாளர் குழுக்களை சேர்ந்தோர் பெரிதும் பயன்பெறுவர்.இவ்வாறு அவர் பேசினார்.

இவ்விழாவில், வெளிநாட்டு வர்த்தக கூடுதல் இயக்குனர் ஜெனரல் சண்முக சுந்தரம், தமிழ்நாடு சிறப்பு பொருளாதார மண்டல, உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவன தலைவர் சுனில் ராலன், 'மெப்ஸ்' உற்பத்தியாளர் சங்க தலைவர் சாஜித் கஸ்மி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-செப்-202107:26:32 IST Report Abuse
அப்புசாமி முருகர் அண்ணே... இப்பவும் ஒண்ணும் குறைஞ்சு போயிடலை. தமிழக கிராமப்புற மக்களுக்காவது ரெண்டு கோடி வேலை குடுங்க. அப்படியே அவிங்க கணக்கில் பாஞ்சி லட்சம் போட்டுரச் சொல்லுங்க. நீங்க சொன்னா மோடி ஐயா கேப்பாரு. தமுழகத்தில் தாமரை மலரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X