அச்சமற்ற பிரதமர்!

Added : செப் 26, 2021
Share
Advertisement
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்த நாளில், அவர் நாட்டுக்கு அளித்த பங்களிப்புகளுக்காக நன்றி தெரிவிக்கிறேன். நாட்டின் பிரச்னைகளை நன்கு உணர்ந்து, அதை அச்சமின்றி புத்திசாலித்தனமாக எதிர்கொள்ளும் திறன் உடைய அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள அதிகம் உள்ளது.ராகுல்லோக்சபா எம்.பி., - காங்.,பதவி வழங்காதது ஏன்?கடந்த 2004 லோக்சபா தேர்தலில் காங்., கூட்டணி வென்றதும், பிரதமர் பதவிக்கு
 அச்சமற்ற பிரதமர்!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்த நாளில், அவர் நாட்டுக்கு அளித்த பங்களிப்புகளுக்காக நன்றி தெரிவிக்கிறேன். நாட்டின் பிரச்னைகளை நன்கு உணர்ந்து, அதை அச்சமின்றி புத்திசாலித்தனமாக எதிர்கொள்ளும் திறன் உடைய அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள அதிகம் உள்ளது.

ராகுல்லோக்சபா எம்.பி., - காங்.,

பதவி வழங்காதது ஏன்?

கடந்த 2004 லோக்சபா தேர்தலில் காங்., கூட்டணி வென்றதும், பிரதமர் பதவிக்கு சோனியாவின் பெயரை நான் பரிந்துரைத்தேன். அவரோ, மன்மோகன் சிங்கிற்கு அப்பதவியை வழங்கினார்; அந்த வாய்ப்பை சரத் பவாருக்கு அவர் வழங்கி இருக்க வேண்டும்.

ராம்தாஸ் அதவாலேமத்திய அமைச்சர், இந்திய குடியரசு கட்சி

பொழுதுபோக்கிற்கு பஞ்சமில்லை!

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கட்டுப்பாடுகள் இருந்தாலும், பா.ஜ.,வினரின் செயல்பாடுகளால் பொழுதுபோக்கிற்கு மட்டும் பஞ்சமே இல்லை. அப்படி இருக்கும்போது, மூடப்பட்டிருக்கும் சினிமா தியேட்டர்களும், நாடக அரங்கங்களும் திறக்கப்பட வேண்டுமா?
சஞ்சய் ராவத்மூத்த தலைவர், சிவசேனா

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X