பொது செய்தி

தமிழ்நாடு

தொடர் நிகழ்ச்சிகளால் சோர்வடையாத மோடி: காரணத்தை விளக்கிய மத்திய அரசு அதிகாரிகள்

Updated : செப் 28, 2021 | Added : செப் 26, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
புதுடில்லி:பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் அமெரிக்க பயணத்தை முடித்து நாடுதிரும்பியுள்ளார். இந்தப் பயணத்தின்போது தொடர்ச்சியாக சந்திப்புகள், கூட்டங்களில் அவர்பங்கேற்றாலும், அவர் சற்றும் சோர்வடையாதது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.தொடர்ச்சியான சந்திப்புதொடர்ச்சியாக சந்திப்புகள், கூட்டங்களில் அவர் பங்கேற்றதற்கான காரணத்தை

புதுடில்லி:பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் அமெரிக்க பயணத்தை முடித்து நாடுதிரும்பியுள்ளார். இந்தப் பயணத்தின்போது தொடர்ச்சியாக சந்திப்புகள், கூட்டங்களில் அவர்பங்கேற்றாலும், அவர் சற்றும் சோர்வடையாதது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.



latest tamil news




தொடர்ச்சியான சந்திப்பு



தொடர்ச்சியாக சந்திப்புகள், கூட்டங்களில் அவர் பங்கேற்றதற்கான காரணத்தை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். பயணத்தை முடித்து அவர் நேற்று நாடு திரும்பினார்.தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றது குறித்து அதிகாரிகள் கூறியுள்ளதாவது:

தொடர்ச்சியாக பல நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றது குறித்து பலரும் ஆச்சரியப்பட்டுள்ளனர். எதற்கான இவ்வளவு நெருக்கமான பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்ற கேள்வியும்எழுந்துள்ளது.ஓய்வு என்பதை மறக்கடிப்பதற்காகவே, மோடி இத்தனை நிகழ்ச்சிகளில்பங்கேற்றுள்ளார். இது அவது பாணி. தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருந்தாலே, அவருக்கு ஓய்வு தேவைப்படாது.


latest tamil news



கடந்த,1990களில் அமெரிக்காவுக்கு மோடி பயணம் மேற்கொண்டார். அப்போது அதிக பயணம் மேற்கொள்வோருக்கு அதிக தள்ளுபடியை விமான நிறுவனங்கள் வழங்கின. பயணச்செலவைக் குறைப்பதற்காக அப்போது தொடர்ச்சியாக பல நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றுஉள்ளார்.பெரும்பாலும் தன் பயணத்தை இரவிலேயே துவக்குவார். அதன்படி காலையில் இருந்தே நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியும்.

அதேபோல் தான் செல்லும் நாட்டுக்கும், நமக்கும் உள்ள நேர வித்தியாசத்தை பார்ப்பார்.அமெரிக்காவில் சென்று சேரும் நேரம் காலை என்பதால் விமானத்தில்தூங்குவதை தவிர்த்தார்.அதிகளவில் தண்ணீர் குடிப்பார். இது உடலை சீராக வைத்திருக்க அவருக்கு உதவுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

டில்லிக்கு நேற்று வந்த சேர்ந்த பிரதமர் மோடிக்கு பா.ஜ., சார்பில் உற்சாக வரவேற்புஅளிக்கப்பட்டது. கட்சியின் தேசியத் தலைவர் நட்டா, மூத்த தலைவர்கள் அருண் சிங், தருண் சுக், ஹர்ஷ் வர்தன் உள்ளிட்டோர் அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.


பிரமாண்ட மாலை



மத்தளங்கள் முழங்க, அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் மோடிக்கு பிரமாண்ட மாலை அணிவிக்கப்பட்டது.இது குறித்து பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கூறியதாவது: வெற்றிகரமாக அமெரிக்கப் பயணத்தை மோடி முடித்து திரும்பியுள்ளார். கொரோனா வைரஸ், தடுப்பூசி,பருவநிலை மாறுபாடு, பயங்கரவாதம் என பல பிரச்னைகள் குறித்து பேசியுள்ளார்.இதன் மூலம், உலகின் மிகவும் முக்கியமான நாடாக இந்தியாவை அவர் நிலைநிறுத்திஉள்ளார்.இவ்வாறு அவர்கூறினார்.


ஆலோசனை



மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி இரவு ஆலோசனை நடத்தினார்


பிரதமர் ஆய்வு



டில்லியில் புதிய பார்லிமென்ட் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. பிரதமர் மோடி நேற்று இரவு அங்கு சென்று பார்வையிட்டார்.


65 மணி நேரத்தில் 20 கூட்டங்கள்



அமெரிக்காவுக்கு மேற்கொண்ட மூன்று நாள் பயணத்தின்போது, 65 மணி நேரத்தில்,20 கூட்டங்களில் மோடி பங்கேற்றுள்ளார். கடந்த 22ம் தேதி புறப்பட்ட மோடி, விமானத்தில் இரண்டு ஆலோசனை கூட்டங்களை நடத்தியுள்ளார். அங்கு ஓட்டலில் மூன்று கூட்டங்களில் பங்கேற்றார்.

கடந்த, 23ம் தேதி, அமெரிக்க நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன், ஐந்துகூட்டங்களில் பேசினார். அதைத் தொடர்ந்து அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசைசந்தித்தார். அதன் பின், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர்களுடன் இரு தரப்பு உறவுகள் குறித்து தனித் தனியாக பேசினார். அன்று மட்டும், அதிகாரிகளுடன் மூன்று கூட்டங்களில்பங்கேற்றார்.

அதற்கடுத்த நாள், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்துபேசினார். மேலும் குவாட் அமைப்பின் கூட்டத்திலும் பங்கேற்றார். அதிகாரிகளுடன் நான்கு ஆலோசனைகூட்டங்களிலும் பங்கேற்றார்.நேற்று முன்தினம் ஐ.நா., பொது சபை கூட்டத்தில் பேசினார். விமானத்தில் வரும்போது அதிகாரிகளுடன், இரண்டு ஆலோசனை கூட்டத்தைநடத்தியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.n. Dhasarathan - chennai,இந்தியா
30-செப்-202110:41:53 IST Report Abuse
K.n. Dhasarathan இவர் சோர்வடைந்தால் என்ன? சோர்வடையவிட்டால் என்ன? மக்கள் சோர்ந்துவிட்டார்களே விவசாயிகள் போராட்டம் விலை வாசி உயர்வு, காரோண, வேலை இழப்பு, வருமானம் இழப்பு .இதற்கு என்ன செய்யப்போகிறீர்கள் ?
Rate this:
Cancel
sankar - chennai,இந்தியா
28-செப்-202108:48:37 IST Report Abuse
sankar கண்ணூறு படாமல் இருக்க வேண்டுவோம்
Rate this:
Cancel
Rajagopal - Chennai,இந்தியா
27-செப்-202114:49:40 IST Report Abuse
Rajagopal நமோ ஒரு அவதார புருஷன் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இந்தியாவுக்கு கிடைத்த வரப்பிரசாதம். அவர் நீடூழி வாழ்ந்து இந்தியாவை காக்க வேண்டும்.
Rate this:
Vinay - Toronto,கனடா
27-செப்-202121:55:46 IST Report Abuse
Vinayஇன்னமா கூவரான், அங்க பொய் ரீல் அறுந்து தொங்குனதைத்தான் பார்த்தோமே , ஒருத்தனும் மதிக்கலை......
Rate this:
balasubramanian - chennai,இந்தியா
28-செப்-202113:02:04 IST Report Abuse
balasubramanianடூப் ஐடெண்டிட்டி என்ன போஸ்ட் வேண்டி கெடக்கு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X