பொது செய்தி

தமிழ்நாடு

ஆட்டோ டிரைவர்களுக்கு போலீசார் அறிவுரை

Added : செப் 26, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஒரு வாரமாக பழைய குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதே நேரத்தில் சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்தும் ரகசியமாக போலீசார் கண்காணித்து வருகின்றனர்.அதன்படி, திருப்பூர் மாநகர போலீஸ் ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர், உரிமையாளர்களுக்கான
 ஆட்டோ டிரைவர்களுக்கு போலீசார் அறிவுரை

திருப்பூர்:திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஒரு வாரமாக பழைய குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதே நேரத்தில் சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்தும் ரகசியமாக போலீசார் கண்காணித்து வருகின்றனர்.அதன்படி, திருப்பூர் மாநகர போலீஸ் ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர், உரிமையாளர்களுக்கான நல்லுறவு கலந்தாய்வு கூட்டம், அந்தந்த ஸ்டேஷன்களில் நடந்தது. இதில், வடக்கு ஸ்டேஷனில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில், வடக்கு இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் நடந்தது.பிற மாவட்டங்களில் இருந்து வரும் ரவுடிகள், கொள்ளையர்கள், குற்றவாளிகள், குட்கா விற்பனையாளர்கள் உட்பட சந்தேக நபர்கள் பயணம் செய்தாலோ அல்லது அவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் போலீசாருக்கு தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X