ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சமூக விரோத செயல்

Added : செப் 26, 2021
Share
Advertisement
திண்டிவனம்-திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர், ரோஷணை போலீசில் அளித்துள்ள புகார் மனு:திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு தினமும் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் விளை பொருட்களைக் கொண்டு வருகின்றனர்.

திண்டிவனம்-திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர், ரோஷணை போலீசில் அளித்துள்ள புகார் மனு:திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு தினமும் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் விளை பொருட்களைக் கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சில சமூக விரோதிகள் தினமும், ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் மது அருந்துதல், புகைப்பிடித்தல் மற்றும் சூதாட்டம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

இரவு நேரங்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் கூடி, விற்பனைக்கூட வளாகத்தில் மதுஅருந்தி விட்டு, பாட்டில்களை உடைத்துப் போடுகின்றனர்.இதை தட்டிக்கேட்கும் செக்யூரிட்டிகளை தாக்குகின்றனர். இங்கு வரும் விவசாயிகளையும், வியாபாரிகளையும் மிரட்டி பணம் பறித்தல் போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.எனவே, இங்கு வரும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு அளிக்கவும், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X