அரண்மனை சாலையில் போக்குவரத்தில் சிரமம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரண்மனை சாலையில் போக்குவரத்தில் சிரமம்

Added : செப் 26, 2021
Share
ராமநாதபுரம் : ராமநாதபுரம் ஓம்சக்திநகர் -அரண்மனை சாலையில் ஒரு மாதத்திற்கும் மேலாக பாதாள சாக்கடை மேன்ஹோல் சரிசெய்யப்படாததால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.நகராட்சி பகுதியான கேணிக்கரை சந்திப்பில்இருந்து ஓம்சக்தி நகர் வழியாக அம்மா பூங்கா செல்லும் அரண்மனை சாலையில் வாகன ஓட்டிகள் அவதிப்படும் நிலை உள்ளது. ராமநாதபுரம் பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே ரயில்வே

ராமநாதபுரம் : ராமநாதபுரம் ஓம்சக்திநகர் -அரண்மனை சாலையில் ஒரு மாதத்திற்கும் மேலாக பாதாள சாக்கடை மேன்ஹோல் சரிசெய்யப்படாததால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.

நகராட்சி பகுதியான கேணிக்கரை சந்திப்பில்இருந்து ஓம்சக்தி நகர் வழியாக அம்மா பூங்கா செல்லும் அரண்மனை சாலையில் வாகன ஓட்டிகள் அவதிப்படும் நிலை உள்ளது. ராமநாதபுரம் பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே ரயில்வே மேம்பாலம் பணியால் ராமேஸ்வரம்சாலை பஸ் போக்குவரத்திற்கு ஒரு வழிப்பாதையாக்கப்பட்டுள்ளது. இதனால் ராமேஸ்வரம் மார்க்கத்தில் இருந்து வரும் அனைத்து டவுன் பஸ்களும் டி பிளாக், அம்மா பூங்கா வழியாக ஓம்சக்தி நகர் -அரண்மனை சாலையில் செல்கின்றன. இந்த சாலையில் ஐந்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் மாணவர்கள் பலர் படிக்கின்றனர்.

இந்த சாலையில் காலை, மாலை நேரங்களில் அதிக வாகன போக்குவரத்தால் நெரிசல் ஏற்படுகிறது. தற்போது பஸ்களும் இவ்வழியாக இயக்கப்படுவதால் அதிக நெரிசல் ஏற்படுகிறது.சாலையோர ஆக்கிரமிப்பு அதிகரிப்பால் சுருங்கிவிட்ட நிலையில், கேணிக்கரை சந்திப்பு அருகே பல இடங்களில் பாதாள சாக்கடை அடைப்பை சீரமைக்க மேன்ஹோல்களை அகற்றி பெரிய குழிகளை ஏற்படுத்தி உள்ளனர்.ஒரு மாதத்திற்கும் மேலாக சரி செய்யாத நிலையில் இவ்வழியே வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. டூவீலர்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.நகராட்சி நிர்வாகம் உடனடியாக இவற்றை சீரமைக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X