பொது செய்தி

தமிழ்நாடு

அக்., 5ல் காத்திருப்பு போராட்டம்; கோ - ஆப்டெக்ஸ் ஊழியர்கள் முடிவு

Added : செப் 26, 2021
Share
Advertisement
சென்னை : 'கோரிக்கைகளை அரசு நிறைவேற்றா விட்டால், வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை' என, கோ - ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.சங்கத்தின் பொதுச் செயலர் விஸ்வநாதன் கூறியதாவது:கோ- - ஆப்டெக்ஸ் விற்பனையகங்களில் பணிபுரியும் பெண்கள், 20 --50 கி.மீ., துாரம் வரை தினமும் பயணித்து, பல பஸ்கள் மாறி பணிக்கு வருகின்றனர்.பல ஆண்டுகளாக இரவு 8:00 மணி வரை இருந்த பணி

சென்னை : 'கோரிக்கைகளை அரசு நிறைவேற்றா விட்டால், வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை' என, கோ - ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.

சங்கத்தின் பொதுச் செயலர் விஸ்வநாதன் கூறியதாவது:கோ- - ஆப்டெக்ஸ் விற்பனையகங்களில் பணிபுரியும் பெண்கள், 20 --50 கி.மீ., துாரம் வரை தினமும் பயணித்து, பல பஸ்கள் மாறி பணிக்கு வருகின்றனர்.பல ஆண்டுகளாக இரவு 8:00 மணி வரை இருந்த பணி நேரம், திடீரென இரவு 9:00 மணி என மாற்றப்பட்டுள்ளது. இதனால், பெண் ஊழியர்கள் இரவில் பஸ் கிடைக்காமல் வீட்டிற்கு செல்ல தவித்து வருகின்றனர்.பெண்கள் பணிபுரியும் பல விற்பனையகங்களில் கழிப்பறை வசதிகள் கிடையாது.

பல விற்பனையகங்களில் பெண்கள் தனி நபராக பணிபுரிந்து வருகின்றனர்.விற்பனை ஆய்வு என்ற பெயரில், 'கூகுள் மீட்' என தொல்லை கொடுத்து வருகின்றனர்.சில அதிகாரிகள், ஊழியர்களிடம் அநாகரிகமான வார்த்தைகளை உபயோகிக்கின்றனர். தற்காலிக ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்கப்படுவதில்லை. கோ- - ஆப்டெக்ஸ் விற்பனையில் சரிவை ஏற்படுத்தும் செயல்கள் நடக்கின்றன.

இதற்கெல்லாம் தீர்வு காணக்கோரி, முதல்வர், தலைமை செயலர், துறை அமைச்சர் ஆகியோருக்கு மனு அளித்துள்ளோம். ஆனாலும் பலன் இல்லை. எனவே, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அக்., 5ல் கோ- - ஆப்டெக்ஸ் தலைமையகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம்.அப்படியும் அரசு தீர்வு காணாவிட்டால், வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X