வெளியீடு: மாவட்டத்தில் இறுதி வேட்பாளர்கள் பட்டியல்...487 பேர் போட்டியின்றி தேர்வு| Dinamalar

தமிழ்நாடு

வெளியீடு: மாவட்டத்தில் இறுதி வேட்பாளர்கள் பட்டியல்...487 பேர் போட்டியின்றி தேர்வு

Added : செப் 26, 2021
Share
கள்ளக்குறிச்சி--கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 2 மாவட்ட கவுன்சிலர்கள், 3 ஒன்றிய கவுன்சிலர்கள், 29 ஊராட்சித் தலைவர்கள் உட்பட மொத்தம் 487 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 3,286 பதவிகளுக்கு 10 ஆயிரத்து 715 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. மாவட்டத்தில், 19 மாவட்ட

கள்ளக்குறிச்சி--கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 2 மாவட்ட கவுன்சிலர்கள், 3 ஒன்றிய கவுன்சிலர்கள், 29 ஊராட்சித் தலைவர்கள் உட்பட மொத்தம் 487 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள 3,286 பதவிகளுக்கு 10 ஆயிரத்து 715 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. மாவட்டத்தில், 19 மாவட்ட கவுன்சிலர்கள், 180 ஒன்றிய கவுன்சிலர்கள், 412 ஊராட்சித் தலைவர்கள், 3,162 கிராம வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 3,773 பதவியிடங்களுக்கு தேர்தல் நடக்கிறது.

இதில், திருக்கோவிலுார், திருநாவலுார், உளுந்துார்பேட்டை, ரிஷிவந்தியம் ஆகிய நான்கு ஒன்றியங்களுக்கு வரும் 6 ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடக்கிறது. இங்கு 939 ஓட்டுச் சாவடிகளில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 300 ஆண், 2 லட்சத்து 33 ஆயிரத்து 183 பெண், 85 திருநங்கைகள் என மொத்தம் 4 லட்சத்து 72 ஆயிரத்து 568 வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். அதேபோல், வரும் 9ம் தேதி கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம், கல்வராயன்மலை ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் இரண்டாம் கட்டமாக தேர்தல் நடக்கிறது. அதில், 950 ஓட்டு சாவடிகளில் 2 லட்சத்து 44 ஆயிரத்து 541 ஆண், 2 லட்சத்து 44 ஆயிரத்து 704 பெண், 101 திருநங்கைகள் என மொத்தம் 4 லட்சத்து 89 ஆயிரத்து 345 பேர் ஓட்டளிக்கின்றனர்.உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கடந்த 15ம் தேதி முதல் 22ம் தேதி வரை பெறப்பட்டது.

இதில், மாவட்ட கவுன்சிலருக்கு 167 மனுக்கள், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருக்கு 1,213 மனுக்கள், ஊராட்சித் தலைவருக்கு 2,244 மனுக்கள், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு 10 ஆயிரத்து 333 என மொத்தம் 13 ஆயிரத்து 957 மனுக்கள் பெறப்பட்டது. தொடர்ந்து, வேட்பு மனு பரிசீலனையின்போது 224 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. மேலும், 2,531 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவி இடங்களுக்கு சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அரசியல் கட்சிகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் பதவிகளில் 2 மாவட்ட கவுன்சிலர்கள், 3 ஒன்றிய கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல், 29 ஊராட்சித் தலைவர்கள், 453 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மாவட்டத்தில் மொத்தம் 487 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டனர். மீதமுள்ள பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.மாவட்ட கவுன்சிலருக்கு 115, ஒன்றிய கவுன்சிலருக்கு 754, ஊராட்சித் தலைவருக்கு 1,387, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 8,459 பேர் என மொத்தம் 10 ஆயிரத்து 715 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களது வாக்குறுதி அடங்கிய துண்டு பிரசுரங்களை வாக்காளர்களிடம் விநியோகித்து கிராமப் புறங்களில் தீவிர ஓட்டு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், கிராமப் புறங்களில் உள்ளாட்சி தேர்தல் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X