தமிழ்நாடு

47ஆயிரம்: கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை...மாவட்டத்தில் 640 மையங்களில் சிறப்பு முகாம் ஏற்பாடு

Added : செப் 26, 2021
Share
Advertisement
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. தகுதி வாய்ந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கடலுார் மாவட்டத்தில் ஏற்கனவே 12 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 18 வயது மேற்பட்டவர்களுக்கு 9.97 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது.இத்திட்டத்தை முழு அளவில் செயல்படுத்த கடந்த
 47ஆயிரம்: கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை...மாவட்டத்தில் 640 மையங்களில் சிறப்பு முகாம் ஏற்பாடு

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. தகுதி வாய்ந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

கடலுார் மாவட்டத்தில் ஏற்கனவே 12 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 18 வயது மேற்பட்டவர்களுக்கு 9.97 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது.இத்திட்டத்தை முழு அளவில் செயல்படுத்த கடந்த 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் தடுப்பூசி முகாம் நடக்கிறது. கடந்த 12ம் தேதி நடந்த முகாமில் 88 ஆயிரம் பேருக்கும், 19 ம் தேதி நடந்த தடுப்பூசி முகாமில் 53 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று 3ம் கட்டமாக தடுப்பூசி முகாம் நடந்தது.இதில் கடலுார் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்த நேற்று காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள கிராம ஊராட்சி அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி மற்றும் கல்லுாரி வளாகங்கள், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, அரசு மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்களில் 640 தடுப்பூசி மையங்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டது. நேற்று 47 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.கடலுார் மாவட்டத்தில் இது வரை 5 லட்சத்து 98 ஆயிரம் ஆண்கள் , 6 லட்சத்து 49 பெண்கள் உட்பட 12 லட்சத்து 47 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதில் கோவாக்சினை விட கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.கலெக்டர் பார்வை நெல்லிக்குப்பம் நகராட்சியில் நடந்த முகாமை கலெக்டர் பாலசுப்ரமணியம் பார்வையிட்டார். வீடு வீடாக சென்று கணக்கெடுத்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கினார். பின் அவர் கூறுகையில், இது வரை மாவட்டத்தில் 12 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

விரைவில் 100 சதவீத மக்களுக்கும் தடுப்பூசி போடும் பணி முடிவடையும். அதற்காக சுகாதார துறையினர் தீவிரம் காட்டி வருகிறார்கள், என்றார்.நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி, துப்புரவு அலுவலர் சக்திவேல், பொறியாளர்(பொறுப்பு) வாசு, சுகாதாரத்துறை இணை இயக்குனர் மீரா, டாக்டர்கள் பிரபு, ராஜேஷ், விஜயலட்சுமி உடனிருந்தனர். சில இடங்களில் அதிகாரிகள் இல்லாமல் கலெக்டர் மட்டும் தனியாக அதிரடியாக ஆய்வு செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X