கிரைம் செய்திகள்

Added : செப் 26, 2021
Share
Advertisement
முதியவரை மிரட்டியவர்கள் மீது வழக்குவிருத்தாசலம்: விருத்தாசலம் பூதாமூரைச் சேர்ந்தவர் சேகர் 52; அதே பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் 36; இருவருக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்தது. நேற்று முன் தினம் மீண்டும் மோதல் ஏற்பட்டு, கார்த்திகேயன் ஆதரவாளர் சோமு, 42; ஆகியோர் சேகரை திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில், கார்த்திகேயன், சோமு

முதியவரை மிரட்டியவர்கள் மீது வழக்கு

விருத்தாசலம்: விருத்தாசலம் பூதாமூரைச் சேர்ந்தவர் சேகர் 52; அதே பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் 36; இருவருக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்தது. நேற்று முன் தினம் மீண்டும் மோதல் ஏற்பட்டு, கார்த்திகேயன் ஆதரவாளர் சோமு, 42; ஆகியோர் சேகரை திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில், கார்த்திகேயன், சோமு ஆகியோர் மீது விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, சோமுவை கைது செய்தனர். மோதலில் 5 பேர் மீது வழக்கு

விருத்தாசலம்: விருத்தாசலம் செல்வராஜ் நகரை சேர்ந்தவர் சின்னசாமி மனைவி சுமதி, 34; அதே பகுதியை சேர்ந்தவர் ராஜா மனைவி பழனியம்மாள், 42; இருவருக்கும் தள்ளு வண்டி டிபன் கடை வைத்து வியாபாரம் செய்வதில், முன்விரோதம் இருந்தது. நேற்று முன் தினம் மீண்டும் மோதல் ஏற்பட்டது. அப்போது, சுமதி, பழனியம்மாள் ஆதரவாளர்கள் தாக்கி கொண்டனர். இருதரப்பு புகாரின் பேரில், பழனியம்மாள், மகன் சேகர், சுமதி, அரங்கநாதன், மனைவி மாலா உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிந்து, சுமதியை கைது செய்தனர். மாட்டு வண்டிகள் பறிமுதல்

விருத்தாசலம்: விருத்தாசலம் நாச்சியார்பேட்டையில் மணிமுக்தாற்று பகுதியில் சப் இன்ஸ்பெக்டர் ஆதி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். மாட்டு வண்டியில் மணல் அள்ளியவர்கள் தப்பியோடினர். போலீசார் வழக்குப் பதிந்து, 2 வண்டிகளை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய வண்டி உரிமையாளர்களை தேடி வருகின்றனர். ஊராட்சி செயலரை

திட்டியவர்கள் மீது வழக்கு

புவனகிரி: மேல்புவனகிரி ஒன்றியம், மருதுார் அருகே மஞ்சக்கொல்லை ஊராட்சி செயலர் சுதாகர், அம்பாள்புரம் ஊராட்சியில் செயலராக கூடுதல் பொறுப்பு வகிக்கிறார். அம்பாள்புரத்தில் உள்ள குடிநீர்த்தொட்டியில் அமர்ந்து மது அருந்தி, மோட்டாரையும் பழுதாக்கினர். இதை ஊராட்சி செயலர் சுதாகர் கண்டித்தார். நேற்று முன் தினம் சுதாகரை வழிமறித்து அம்பாள்புரம் வேல்முருகன்,37; இளவழகன்,26; ஜீவா,20; ஆகியோர் பணி செய்ய விடாமல் தடுத்து ஆபாசமாக திட்டினர். இது குறித்த புகாரின் பேரில் மருதுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். மினி லாரி மோதி ஒருவர் பலி விருத்தாசலம்: விருத்தாசலம் ஆலடி சாலை கண்மணி நகரை சேர்ந்தவர் சுரேஷ் 40; கூலி தொழிலாளி. இவர் கடந்த 23ம் தேதி ஆலடி சாலையில் பைக்கில் சென்றார். அப்போது, எதிரே வந்த மினி லாரி பைக் மீது மோதியது. பலத்த காயமடைந்த அவர் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனர். சாராயம் பதுக்கிய இருவர் கைது

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் அண்ணாமலை மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரி சாராயம் பதுக்கிய சி.என்.பாளையம் திடீர்குப்பம் பிள்ளையர்கோவில் தெரு மங்கம்மாள்,65;சி.என்.பாளையம் காலனி நடுத்தெரு ஆறுமுகம்,50; ஆகியோரை கைது செய்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் ராகினி,60;அதே பகுதியை சேர்ந்தவர் பாத்திமா,45; இருவருக்கும் வழி சம்மந்தமாக முன்விரோதம் இருந்தது. நேற்று பாத்திமா மற்றும் அதே பகுதி மரியராஜ் மகன் எபின்,19;ஆகியோர் ராகினியை திட்டி தாக்கினர். நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.மகள் மாயம் : தாய் புகார்

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகையை சேர்ந்தவர் பாலு. இவரது மகள் விஜயலட்சுமி,21; இவர் ஸ்வீட் கடையில் வேலை பார்த்தார். கடந்த 23 ம் தேதி தனது தோழி அரசூர் காரப்பட்டு சண்முகம் மனைவி தீபா வீட்டிற்கு வந்தார். பின் இருவரும் தீபாவின் உறவினர் வீட்டு மஞ்சள் நீர் விழாவிற்கு சென்றனர். பின்னர் இருவரும் வீடு திரும்பவில்லை. இது குறித்து விஜயலட்சுமியின் தாய் சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர். மணல் கடத்தியவருக்கு வலை

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் அண்ணாமலை மற்றும் போலீசார் நரிமேடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது நரிமேடு கெடிலம் ஆற்று பாலத்தின் வழியாக மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்த முத்துநாராயணபுரம் ராமு,45; என்பவர் வண்டியை விட்டு தப்பியோடினார். நடுவீரப்பட்டு போலீசார் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து தப்பியோடிய ராமுவை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X