சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிடித்த பன்றிகளை ஒப்படைக்க நகராட்சி எதிரே போராட்டம்

Added : செப் 26, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுார் நகராட்சி சார்பில் பிடிக்கப்பட்ட பன்றிகளை திரும்ப ஒப்படைக்க கோரி, அதன் உரிமையாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் கேனுடன் போராட்டம் நடத்தினர். கடலுார் நகரப்பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க மதுரை மாவட்டத்தில் இருந்து பிரத்யேக நபர்களை வரவழைத்தனர். கடலுாரில் நேற்று சில இடங்களில் பன்றிகளை பிடித்து வாகனத்தில் ஏற்றி முதுநகர்

கடலுார்-கடலுார் நகராட்சி சார்பில் பிடிக்கப்பட்ட பன்றிகளை திரும்ப ஒப்படைக்க கோரி, அதன் உரிமையாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் கேனுடன் போராட்டம் நடத்தினர். கடலுார் நகரப்பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க மதுரை மாவட்டத்தில் இருந்து பிரத்யேக நபர்களை வரவழைத்தனர். கடலுாரில் நேற்று சில இடங்களில் பன்றிகளை பிடித்து வாகனத்தில் ஏற்றி முதுநகர் போலீஸ் நிலையம் அருகே நிறுத்தி வைத்திருந்தனர். இதைப் பார்த்ததும் பன்றி வளர்ப்போர் கடலுார் டி.எஸ்.பி., அலுவலகம் முன்பு திரண்டு, பன்றிகளை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். பன்றிகள் பிடிப்பதற்கு முன் நோட்டீஸ் வழங்கவில்லை என கேட்டனர். கடலுார் புதுநகர் இன்ஸ்பெக்டர் தனுஷ்கோடி மற்றும் போலீசார் திரண்டிருந்த பன்றி வளர்ப்போரை விரட்டியடித்தனர். இதையடுத்து பெண்கள் சிலர் மண்ணெண்ணெய் கேனுடன் நகராட்சி அலுவலகம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் நகராட்சி அதிகாரிகள் பேசினர். கலைந்து செல்லா விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றதால் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X