பொது செய்தி

தமிழ்நாடு

சூடுபிடித்தது ஒசைரி நூல் வர்த்தகம்:நூற்பாலை துறையினர் மகிழ்ச்சி

Added : செப் 26, 2021
Share
Advertisement
திருப்பூர்:தொற்றுக்குப் பின், திருப்பூரில், ஒசைரி நுால் வர்த்தகம் சூடுபிடித்துள்ளதால், நுாற்பாலை துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.திருப்பூரில் உள்ள ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு பின்னலாடை நிறுவனங்களுக்கு முக்கிய மூலப்பொருளாக ஒசைரி நுால் உள்ளது. திருப்பூர், கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நுாற்பாலைகளிடம் இருந்து நேரடியாகவும், வர்த்தகர்களிடம்

திருப்பூர்:தொற்றுக்குப் பின், திருப்பூரில், ஒசைரி நுால் வர்த்தகம் சூடுபிடித்துள்ளதால், நுாற்பாலை துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.திருப்பூரில் உள்ள ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு பின்னலாடை நிறுவனங்களுக்கு முக்கிய மூலப்பொருளாக ஒசைரி நுால் உள்ளது. திருப்பூர், கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நுாற்பாலைகளிடம் இருந்து நேரடியாகவும், வர்த்தகர்களிடம் இருந்தும், ஒசைரி நுால், கொள்முதல் செய்யப்படுகிறது.தொற்றுக்கு பின், தற்போது, ஐரோப்பா, அமெரிக்க நாடுகளில் இருந்து திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஆர்டர் வருகை அதிகரித்துள்ளது.
விஜயதசமி, தீபாவளி நெருங்கிவிட்டது; டிசம்பரில் கிறிஸ்துமஸ், ஜனவரியில் ஆங்கில புத்தாண்டு, பொங்கல் என, அடுத்தடுத்து தொடர்ச்சியாக பண்டிகை காலம் வருகிறது. உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கும், வெளி மாநிலங்களில் இருந்து, ஆர்டர்கள் குவிகின்றன.ஆடை தயாரிப்புக்காக, பின்னலாடை துறையினர், அதிகளவு நுால் கொள்முதல் செய்ய துவங்கியுள்ளனர்.இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன் கன்வீனர் பிரபுதாமோதரன் கூறியதாவது:நாடு முழுவதும் முழுவீச்சில் தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது.

தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால், மக்கள் வழக்கம்போல் பொருட்கள் வாங்க வெளியே வரத் துவங்கிவிட்டனர்.மும்பை, கோல்கத்தா, பெங்களூரு என எல்லா நகரங்களிலும், வர்த்தக மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆடை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அடுத்தடுத்து பண்டிகைகளும் வருகின்றன.வெளி மாநில வர்த்தகரிடம் இருந்து, திருப்பூர் உள்நாட்டு ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆர்டர் வருகை அதிகரித்துள்ளது. ஏற்றுமதி ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கும் சிறப்பான வகையில் ஆர்டர் கிடைத்துவருகிறது. தொழிலாளர் வருகையால், ஆடை உற்பத்தி சுறுசுறுப்பாக நடக்கிறது.

இதனால், உள்நாட்டில் நுால் வர்த்தகம் சூடுபிடித்துள்ளது. நுால் ஏற்றுமதியும் சீராக நடந்துவருகிறது. நுாற்பாலைகளிடம் நுால் இருப்பு இல்லை என்ற நிலையில் வர்த்தகம் நடைபெறுகிறது. அதேசமயம், ஆடை உற்பத்தியாளர்களுக்கு தட்டுப்பாடு இன்றி, ஒசைரி நுால் வழங்கப்படுகிறது. வரும் நவம்பர் முதல், சந்தைக்கு புதிய பருத்தி வரத்து துவங்கும்; நுால் விலை மாற்றமின்றி, இதே நிலையில் தொடரும்.இவ்வாறு, அவர் கூறினார்.

நுால் படம், வண்ணப்படமாய் வைக்கவும்நுாற்பாலை துறையினர் சொல்வதென்ன?* ஏற்றுமதி, உள்நாட்டு ஆர்டர் உயர்வு* பின்னலாடை உற்பத்தி மும்முரம்* ஒசைரி நுால் தேவை அதிகரிப்பு* நுால் கிடைக்கச்செய்ய நடவடிக்கை* விலை சீராக இருக்கும் என நம்பிக்கை* நவ., முதல் புதிய பருத்தி வரும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X