சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம்

Added : செப் 26, 2021
Share
கடலுார்-தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம் சி.ஐ.டி.யூ., மாநில ஒருங்கிணைப்பு குழு கூட்டம், கடலுார் புதுப்பாளையத்தில் நடந்தது.சம்மேளன உதவி தலைவர் குமார் தலைமை தாங்கினார். தண்டபாணி, முருகன் முன்னிலை வகித்தனர். சம்மேளனத்தின் தலைவர் குணசேகரன் வேலை அறிக்கையை சமர்ப்பித்து பேசினார். சி.ஐ.டி.யூ., மாவட்ட இணைச்செயலாளர் சுப்புராயன், மாநில பொதுச் செயலாளர் வேங்கடபதி

கடலுார்-தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம் சி.ஐ.டி.யூ., மாநில ஒருங்கிணைப்பு குழு கூட்டம், கடலுார் புதுப்பாளையத்தில் நடந்தது.

சம்மேளன உதவி தலைவர் குமார் தலைமை தாங்கினார். தண்டபாணி, முருகன் முன்னிலை வகித்தனர். சம்மேளனத்தின் தலைவர் குணசேகரன் வேலை அறிக்கையை சமர்ப்பித்து பேசினார். சி.ஐ.டி.யூ., மாவட்ட இணைச்செயலாளர் சுப்புராயன், மாநில பொதுச் செயலாளர் வேங்கடபதி பங்கேற்று பேசினர். சரவணன் நன்றி கூறினார்.

டாஸ்மாக் குடோன் சுமை பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் 43 டாஸ்மாக் குடோன்களில் 2,500 சுமைப்பணி தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஏற்றுக் கூலி பாக்கியை வழங்க வேண்டும். பெட்டிக்கு ஏற்று கூலியாக ரூ.3.50 வழங்க வேண்டும். பி.எப்., இ.பி.எப்., பலன்கள், மருத்துவ உதவிகள், சலுகைகள் கிடைக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X