விஸ்வகர்மா மகாஜன சங்க கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விஸ்வகர்மா மகாஜன சங்க கூட்டம்

Added : செப் 26, 2021
Share
கடலுார்-கடலுாரில் நடந்த விஸ்வகர்மா மகாஜன சங்க கூட்டத்திற்கு நீக்கப்பட்ட நிர்வாகிகள் வந்ததால், பரபரப்பு நிலவியது.விஸ்வகர்மா மகாஜன சங்க கூட்டம், கடலுார், திருப்பாதிரிப்புலியூர், தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. சங்க தலைவர் சேகர் தலைமை தாங்கினார். செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் முருகன், ஆலோசகர் ராஜகோபால் உட்பட பலர் பங்கேற்றனர். சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட

கடலுார்-கடலுாரில் நடந்த விஸ்வகர்மா மகாஜன சங்க கூட்டத்திற்கு நீக்கப்பட்ட நிர்வாகிகள் வந்ததால், பரபரப்பு நிலவியது.விஸ்வகர்மா மகாஜன சங்க கூட்டம், கடலுார், திருப்பாதிரிப்புலியூர், தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. சங்க தலைவர் சேகர் தலைமை தாங்கினார். செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் முருகன், ஆலோசகர் ராஜகோபால் உட்பட பலர் பங்கேற்றனர். சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட கமிட்டி தலைவர் உட்பட 6 பேர் கூட்டத்திற்கு வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. பிரச்னை எழும் என்பதால், டி.எஸ்.பி., அசோகன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், குருமூர்த்தி, கவிதா உட்பட 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட 6 பேரும் கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். எங்களது கோரிக்கைகளை மட்டும் கூறிவிட்டு செல்கிறோம் என்றனர். அதற்கு நீங்கள் தனியாக கூட்டம் நடத்திக் கொள்ளுங்கள் என போலீசார் கூறியதையேற்று கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X