அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தேர்தல் தோல்வி பயத்தில் பொய் சொல்கிறார் பழனிசாமி'; அமைச்சர் தங்கம் தென்னரசு

Added : செப் 26, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : ''உள்ளாட்சி தேர்தல் தோல்வி பயத்தால், முன்னாள் முதல்வர் பழனிசாமி பொய் சொல்கிறார்,'' என தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி: முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார். அதாவது, கவர்னர் அறிக்கையில் 53; முதல்வர் பதிலுரையில் இரண்டு; பட்ஜெட்டில் 43; வேளாண்
 'தேர்தல் தோல்வி பயத்தில் பொய் சொல்கிறார் பழனிசாமி';  அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை : ''உள்ளாட்சி தேர்தல் தோல்வி பயத்தால், முன்னாள் முதல்வர் பழனிசாமி பொய் சொல்கிறார்,'' என தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி: முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார். அதாவது, கவர்னர் அறிக்கையில் 53; முதல்வர் பதிலுரையில் இரண்டு; பட்ஜெட்டில் 43; வேளாண் பட்ஜெட்டில் 23; அமைச்சர் பதிலுரையில் ஆறு, இதர அறிவிப்புகளின் வழியாக 16 என, 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், பழனிசாமி முதல்வராக இருந்தபோது 537 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அவற்றில் 348 வாக்குறுதிகள் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டு, ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு ஓரளவு நிதி ஒதுக்கப்பட்டது.

ஆணைகள் பிறப்பிக்கப்பட்டும் 143 அறிவிப்புகளுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை; 20 அறிவிப்புகளுக்கு ஆணை பிறப்பிக்கப்படவில்லை; நிதியும் ஒதுக்கப்படவில்லை; 26 அறிவிப்புகள் மறக்கப்பட்டன. இந்நிலையில், ஆட்சி செய்த பழனிசாமி, உள்ளாட்சி தேர்தல் தோல்வி பயம் காரணமாக, பதற்றம் மற்றும் பயத்தில், முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற பொய்யான குற்றச்சாட்டை சொல்லி வருகிறார். இதனால், அவரின் நிலை தான் தாழும்.

முறைகேடாக கூட்டுறவு சங்கத் தலைவர் பதவிகளை ஏற்ற அ.தி.மு.க.,வினர், கூட்டுறவு வங்கிகளில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.ரவுடிகள் ஒழிப்பு, சட்டம்- ஒழுங்கு பிரச்னையில் முதல்வர் உரிய முடிவெடுப்பார். செங்கல்பட்டில் தடுப்பூசி தொழிற்சாலையை துவங்க, மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் பேச்சு நடத்த உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan - chennai,இந்தியா
27-செப்-202118:15:50 IST Report Abuse
Narayanan Mr. Thennarasu you and your party only giving unbelievable promises along with huge lie . This being done since from 1967 . After coming to power your party threatening other parties . I am very confident your party is only in huge lie party .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X