பொது செய்தி

இந்தியா

*அலைபாயும் அமைச்சர்கள்!தங்களுக்கு பிடித்த அரசு இல்லங்களில் குடியேற...முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு புதிய தலைவலி

Added : செப் 26, 2021
Share
Advertisement
பெங்களூரு-அமைச்சர் பதவிக்காக, முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் மன்றாடிய அமைச்சர்கள், தற்போது அரசு இல்லத்துக்காக அலைபாய்கின்றனர். இதனாலும், சில முன்னாள் அமைச்சர்கள், இல்லங்களை காலி செய்யாதது முதல்வருக்கு பெரும் தலைவலியாக உள்ளது.முதல்வர் பசவராஜ் பொம்மை பொறுப்பேற்ற பின், போராடி அமைச்சர் பதவி பெற்ற சிலர், குறிப்பிட்ட இல்லத்தின் மீது கண் வைத்து, அதே இல்லம் வேண்டுமென

பெங்களூரு-அமைச்சர் பதவிக்காக, முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் மன்றாடிய அமைச்சர்கள், தற்போது அரசு இல்லத்துக்காக அலைபாய்கின்றனர். இதனாலும், சில முன்னாள் அமைச்சர்கள், இல்லங்களை காலி செய்யாதது முதல்வருக்கு பெரும் தலைவலியாக உள்ளது.

முதல்வர் பசவராஜ் பொம்மை பொறுப்பேற்ற பின், போராடி அமைச்சர் பதவி பெற்ற சிலர், குறிப்பிட்ட இல்லத்தின் மீது கண் வைத்து, அதே இல்லம் வேண்டுமென பிடிவாதம் பிடிக்கின்றனர். அமைச்சர்கள் நாராயண கவுடா, ஆனந்த் சிங், ஹாலப்பா ஆச்சாருக்கு, இதுவரை அரசு இல்லம் வழங்கப்படவில்லை. இவர்கள், எடியூரப்பா அரசில், அமைச்சராக இருந்த யோகேஸ்வருக்கு ஒதுக்கப்பட்டிருந்த குமார கிருபா கிழக்கில், இல்லம் எண் - 3ஐ பெற முயற்சிக்கின்றனர். அமைச்சர் பதவியை எதிர்ப்பார்க்கும் யோகேஸ்வர், அரசு இல்லத்தை காலி செய்ய தயாராக இல்லை. மேலும் நான்கைந்து மாதங்கள், அதே இல்லத்தில் வசிக்க அனுமதி அளிக்கும்படி, முதல்வரிடம் கோரியுள்ளார்;

அதற்கு முதல்வரும் சம்மதித்துள்ளார். யோகேஸ்வர் இல்லத்தை வழங்க முடியாவிட்டால், ஜெகதீஷ் ஷெட்டர் அமைச்சராக இருந்த போது, வசித்து வந்த கிரசென்ட் சாலையில் உள்ள இல்லத்தை, தனக்கு வழங்கும்படி, ஸ்ரீராமுலு நெருக்கடி கொடுக்கிறார். எடியூரப்பா அரசில், துணை முதல்வராக இருந்த அஸ்வத் நாராயணாவுக்கு, ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள, ரேஸ் வியூ காட்டேஜ் எண் -1 வழங்கப்பட்டிருந்தது. தற்போது இந்த இல்லம், முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.எனவே, வேறு இல்லத்தை தேடும், அமைச்சர் அஸ்வத் நாராயணா, கிரசன்ட் சாலை இல்லத்தை கேட்டார். ஆனால் இந்த இல்லம், ஜெகதீஷ் ஷெட்டருக்கு நெருக்கமான, அமைச்சர் சங்கர் பாட்டீல் முனேனகொப்பாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த இல்லத்தை ஷெட்டர் இன்னும் காலி செய்யவில்லை. போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த லட்சுமண் சவதி வசித்த, ஜெயமஹால் லே -- அவுட் அரசு இல்லத்தை, இன்னாள் அமைச்சர் நாகேஷ் கேட்டுள்ளார்.

இவருக்கு இந்த இல்லம் கிடைக்க வாய்ப்புள்ளது.சவதியும் இன்னும் இல்லத்தை காலி செய்யாததால், நாகேஷ் காத்திருக்க வேண்டியுள்ளது. மின்துறை அமைச்சர் சுனில்குமார், இதற்கு முன் சுரங்கம், நில ஆய்வுத்துறை அமைச்சராக இருந்த முருகேஷ் நிரானி வசிக்கும் சாங்கே சாலையின் இல்லத்தை கோரியுள்ளார்.தற்போது தொழிற்துறை அமைச்சரான இவர், அதே வீட்டில் இருப்பதால், சுனில்குமாருக்கு அந்த இல்லம் கிடைப்பது சந்தேகம் என, கூறப்படுகிறது.

அமைச்சர் ஸ்ரீராமுலு, 7 மினிஸ்டர் குடியிருப்பில் வசிக்கிறார். எடியூரப்பாவின் அரசியல் செயலர்களாக இருந்த விஸ்வநாத், ரேணுகாச்சார்யா முறையே, 7 மினிஸ்டர் குடியிருப்பில், எண் 1, எண் - 7ல் வசிக்கின்றனர்.அனுகிரஹா இல்லத்தில், லோக் ஆயுக்தா நீதிபதி விஸ்வநாத் ஷெட்டி, சதாசிவநகரிலுள்ள, கே.எச்.பி., அரசு இல்லம் எண் - 243ல், மனித உரிமைகள் ஆணைய தலைவரான நீதிபதி சங்கர்சிங் வகேலா உள்ளனர். அரசு இல்லங்கள் காலியாக இல்லாததால், புதிய அமைச்சர்களுக்கு, அரசு இல்லம் கொடுப்பது, முதல்வருக்கு பெறும் தலைவலியாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X