பொது செய்தி

தமிழ்நாடு

தீர்வு கண்டால் தித்திக்கும் 'கனவு' வசமாக கடனுதவி வேண்டும்

Added : செப் 26, 2021
Share
Advertisement
மத்திய அரசின் ஆவாஸ் யோஜனா - மறு குடியமர்வு திட்டத்தில், ஆட்சேபனைக்குரிய நிலத்தில் வசிப்பவர்களுக்கு, அடுக்குமாடி வீடு கட்டி கொடுக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் பாரதி நகர், ஜெயாநகர், திருக்குமரன் நகர், வீரபாண்டி, அவிநாசி -சூளை, உடுமலை ஜெ.ஜெ., நகர் பகுதிகளில், 3,840 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, பயனாளிகள் தேர்வு முடிந்திருந்த நிலையில்,

மத்திய அரசின் ஆவாஸ் யோஜனா - மறு குடியமர்வு திட்டத்தில், ஆட்சேபனைக்குரிய நிலத்தில் வசிப்பவர்களுக்கு, அடுக்குமாடி வீடு கட்டி கொடுக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் பாரதி நகர், ஜெயாநகர், திருக்குமரன் நகர், வீரபாண்டி, அவிநாசி -சூளை, உடுமலை ஜெ.ஜெ., நகர் பகுதிகளில், 3,840 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, பயனாளிகள் தேர்வு முடிந்திருந்த நிலையில், மீண்டும் விண்ணப்பம் பெற்று, புதிய பயனாளிகளை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.பல்லடம் அறிவொளி நகர் பகுதியில், 288 வீடுகளுக்கும் பயனாளிகள் தேர்வு நடந்து வருகிறது. பயனாளிகள், ஒரு லட்சம் முதல், 1.50 லட்சம் ரூபாய் வரை, பங்களிப்பு தொகையாக செலுத்த வேண்டும் என, குடிசை மாற்று வாரியம், கடிதம் அனுப்பி வருகிறது.பயனாளிகள் கூறுகையில், ''வீடு பெறும் பயனாளிகள், குறிப்பிட்ட காலத்திற்குள், பங்களிப்பு தொகைக்கு, வரைவோலை எடுத்து கொடுக்காவிட்டால், அடுத்து காத்திருக்கும் பயனாளிகளுக்கு வீடுகளை ஒதுக்கிவிடுவோம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். பத்து ஆண்டுகளாக காத்திருந்த ஏழைகளுக்கு கிடைக்காமல், தகுதியற்ற நபர்கள் பயன டையும் நிலை உருவாகும். எனவே, தமிழக அரசு, அடுக்குமாடி வீடு பெறும் பயனாளிகளுக்கு, வங்கிக்கடன் வசதி செய்து கொடுக்க வேண்டும்'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X