'ஜாலி ரைட்' சென்ற போது வாடகை கார் மீது மோதியதால், டிரைவர் காயம்

Added : செப் 26, 2021
Share
Advertisement
இந்திரா நகர்-நள்ளிரவில் போதையில் 'ஜாலி ரைட்' சென்ற போது வாடகை கார் மீது மோதியதால், டிரைவர் காயம் அடைந்தார்.பெங்களூரு இந்திரா நகரில் நேற்று முன் தினம் இரவில் பார்ட்டி முடித்து விட்டு, புலிகேசி நகரை சேர்ந்த தொழிலதிபர் கரிம் மெமானி மகன் ஜவேர், 30, மருமகள் ஸ்ரேயா, 28 மற்றும் நண்பர்கள் மூன்று சொகுசு காரில் 'ஜாலி ரைட்' சென்றனர்.கமாண்டோ ஆஸ்பத்திரி அருகே சென்றபோது, ஜமிர்

இந்திரா நகர்-நள்ளிரவில் போதையில் 'ஜாலி ரைட்' சென்ற போது வாடகை கார் மீது மோதியதால், டிரைவர் காயம் அடைந்தார்.பெங்களூரு இந்திரா நகரில் நேற்று முன் தினம் இரவில் பார்ட்டி முடித்து விட்டு, புலிகேசி நகரை சேர்ந்த தொழிலதிபர் கரிம் மெமானி மகன் ஜவேர், 30, மருமகள் ஸ்ரேயா, 28 மற்றும் நண்பர்கள் மூன்று சொகுசு காரில் 'ஜாலி ரைட்' சென்றனர்.கமாண்டோ ஆஸ்பத்திரி அருகே சென்றபோது, ஜமிர் ஓட்டி வந்த கார், எதிரே வந்த வாடகை கேப் கார் மீது மோதியது. இதில் வாடகை கார் முன்பக்கம் சேதமடைந்தது. டிரைவர் கேசவ மூர்த்தி, 35 காயமடைந்தார். அவர் கொடுத்த புகாரின் படி, ஹலசூரு போக்குவரத்து போலீசார், ஜமிரை கைது செய்தனர். பரிசோதனையில் அவர் குடித்திருப்பது தெரியவந்தது.எனவே அவர் மீது அலட்சியம், அபாயகரமான வாகனம் ஓட்டியது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X