பெலகாவி சுவர்ண சவுதாவில்சட்டசபை குளிர்க்கால தொடர்

Added : செப் 26, 2021
Share
Advertisement
பெலகாவி-''சட்டசபை குளிர்க்கால கூட்டத்தொடரை பெலகாவியின் சுவர்ண சவுதாவில் நடத்துவோம். இது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும்,'' என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.பெலகாவியில், அவர் நேற்று கூறியதாவது:இம்முறை மழைக்கால கூட்டத்தொடர், பெலகாவியின் சுவர்ண சவுதாவில் நடத்தப்படும். இது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும். எந்த

பெலகாவி-''சட்டசபை குளிர்க்கால கூட்டத்தொடரை பெலகாவியின் சுவர்ண சவுதாவில் நடத்துவோம். இது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும்,'' என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

பெலகாவியில், அவர் நேற்று கூறியதாவது:இம்முறை மழைக்கால கூட்டத்தொடர், பெலகாவியின் சுவர்ண சவுதாவில் நடத்தப்படும். இது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும். எந்த அலுவலகங்களை, இங்கு துவங்க வேண்டுமோ, அந்த அலுவலகங்கள் டிசம்பருக்குள் துவங்குவோம்.பெலகாவியில் சர்க்கரை இயக்குனரக அலுவலகம், அக்டோபர் 3ல் செயல்பட துவங்கும்.முன்னாள் முதல்வர் எடியூரப்பா சுற்றுப்பயணத்துக்கு, எந்த தடையும் இல்லையென மாநில பொறுப்பாளர் அருண் சிங் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார். இது பற்றி நான் அதிகமாக கூறமாட்டேன்.ஏற்கனவே கொரோனாவால் மக்கள் சங்கடத்தில் உள்ளனர். பந்த் நடத்தி விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுப்பது சரியல்ல. போராட்டக்காரர்கள், வியாபாரம், வர்த்தகத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.வெள்ளப்பெருக்கால் 2019 -- 20ல் பல வீடுகள் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரணம் வழங்குகிறது. பெலகாவியில் 44 ஆயிரத்து 205 வீடுகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.விளைச்சல் சேதமடைந்த 1.63 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கியுள்ளோம். கரும்பு விவசாயிகளுக்கு பாக்கி தொகையை வழங்கும்படி சர்க்கரை ஆலைகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X