பொது செய்தி

இந்தியா

கே. ஆர்.எஸ்., அணை நிரம்பாததால் விவசாயிகள் வருத்தம்

Added : செப் 26, 2021
Share
Advertisement
மாண்டியா-கடந்த மூன்று ஆண்டுகளாக, ஆகஸ்டிலேயே நிரம்பி வந்த, கே.ஆர்.எஸ்., அணை, இம்முறை செப்டம்பர் முடியும் நிலையிலும் நிரம்பாததால் விவசாயிகள் மட்டுமின்றி மக்களும் வருத்தமடைந்து உள்ளனர்.காவிரி நீர்ப்பாசன பகுதிகளில், மூன்று ஆண்டுகளாக மழை கொட்டியது. மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக குடகில், மண் சரிவால் உயிர்ச்சேதம், வெள்ளப்பெருக்கால் வீடு, நிலம், தோட்டங்கள்

மாண்டியா-கடந்த மூன்று ஆண்டுகளாக, ஆகஸ்டிலேயே நிரம்பி வந்த, கே.ஆர்.எஸ்., அணை, இம்முறை செப்டம்பர் முடியும் நிலையிலும் நிரம்பாததால் விவசாயிகள் மட்டுமின்றி மக்களும் வருத்தமடைந்து உள்ளனர்.

காவிரி நீர்ப்பாசன பகுதிகளில், மூன்று ஆண்டுகளாக மழை கொட்டியது. மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக குடகில், மண் சரிவால் உயிர்ச்சேதம், வெள்ளப்பெருக்கால் வீடு, நிலம், தோட்டங்கள் பாழானது.தொடர் மழையால், மாண்டியா ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள கே.ஆர்.எஸ்., அணைக்கு பெருமளவில், தண்ணீர் பாய்ந்து வந்தது.ஆகஸ்ட் மாதமே, அணை அதிகபட்ச கொள்ளளவை எட்டியது. ஆனால் இம்முறை குடகு உட்பட காவிரி நீர்ப்பாசன பகுதியில் வெள்ளத்தை ஏற்படுத்தும் அளவுக்கு, மழை பெய்யவில்லை.ஜூலை, ஆகஸ்டில் மழை பெய்தது என்றாலும், அணை நிரம்பும் அளவுக்கு இல்லை.செப்டம்பர் முடியும் நிலையிலும், அணை நிரம்பாததால் விவசாயிகள், பொது மக்கள் வருத்தமடைந்துள்ளனர்.கே.ஆர்.எஸ்., அணை நிரம்பாவிட்டால், கோடைக்காலத்தில் பெங்களூரு, மாண்டியா, மைசூரு நகரங்களுக்கு குடிநீர் வினியோகிப்பதில் பாதிப்பு ஏற்படும் என அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.தற்போது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் மீண்டும் மழை பெய்கிறது. சில நாட்கள் மழை நீடித்தால் அணை நிரம்பும் வாய்ப்புள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X