பொது செய்தி

தமிழ்நாடு

தவிக்கிறது பின்னலாடை துறை

Added : செப் 26, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள், ஆடை தயாரிப்புக்காக, அமெரிக்கா, ஐரோப்பா, தைவான், சீனா போன்ற வெளிநாடுகளிலிருந்து நிட்டிங், டையிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி, தையல் மெஷின் உட்பட மெஷின்களை இறக்குமதி செய்து பயன்படுத்துகின்றன.ஆடை உற்பத்தியாளர்களும், ஜாப்ஒர்க் துறையினரும் தங்களுக்கு தேவையான மெஷின்களை, நேரடியாக இறக்குமதி செய்தும்; வர்த்தகர்கள் மூலமாகவும்

திருப்பூர்:திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள், ஆடை தயாரிப்புக்காக, அமெரிக்கா, ஐரோப்பா, தைவான், சீனா போன்ற வெளிநாடுகளிலிருந்து நிட்டிங், டையிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி, தையல் மெஷின் உட்பட மெஷின்களை இறக்குமதி செய்து பயன்படுத்துகின்றன.ஆடை உற்பத்தியாளர்களும், ஜாப்ஒர்க் துறையினரும் தங்களுக்கு தேவையான மெஷின்களை, நேரடியாக இறக்குமதி செய்தும்; வர்த்தகர்கள் மூலமாகவும் பெறுகின்றன.கொரோனாவுக்குப் பின், சர்வதேச அளவில், கன்டெய்னர் தட்டுப்பாடு, சரக்கு கப்பல் இயக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆயத்த ஆடை ஏற்றுமதியில் சிக்கல் ஏற்படுவதுபோல், வெளிநாடுகளில் இருந்து ஆடை தயாரிப்புக்கான மெஷினரிகள், ஆடைகளில் இணைக்கப்படும் அக்சசரீஸ்கள் இறக்குமதி செய்வதும் சிக்கலாகிறது.வெளிநாடுகளில் ஆர்டர் செய்யும் மெஷின்கள் திருப்பூர் வந்தடைய நீண்ட தாமதமாகிறது. மெலும், சரக்கு போக்குவரத்து கட்டணம் உயர்வால், இறக்குமதி மெஷின்கள், உதிரிபாகங்களுக்கு அதிக விலை கொடுக்கவேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதனால், பின்னலாடை துறையினரும், மெஷின் இறக்குமதியாளர்களும் தவிக்கின்றனர்.இறக்குமதி தையல் மெஷின் வர்த்தகர் சீனிவாசன் கூறியதாவது:திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள், விரிவாக்க பணிகளை துவக்கியுள்ளனர். அதனால், கடந்த ஆண்டைவிட இந்தாண்டு, தையல் மெஷின் வர்த்தகம் சிறப்பாக உள்ளது. 70 சதவீதத்துக்கும் மேல் சீன தையல் மெஷின்களே திருப்பூரில் பயன்படுத்தப்படுகின்றன.கப்பல் இயக்கம் பாதிப்பு, கன்டெய்னர் தட்டுப்பாட்டால், ஆர்டர் செய்த மெஷின்களை சீனா விலிருந்து தருவிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு உரிய காலத்தில் மெஷின்களை வழங்கமுடிவதில்லை. அதனால், திட்டமிட்டபடி ஆடை தயாரிக்க முடியாத நிலை, பின்னலாடை துறையினருக்கு ஏற்படுகிறது. கன்டெய்னர் கட்டணம் உட்பட சரக்கு கப்பல் போக்குவரத்து கட்டணம் பலமடங்கு அதிகரித்துள்ளது.இந்த விலை உயர்வை ஆடை உற்பத்தியாளர்களே தாங்கிக்கொள்ள வேண்டியுள்ளது. மெஷின் வர்த்தகர்களுக்கும், லாபம் இழப்பு ஏற்படுகிறது. தையல் மெஷின் மட்டுமல்ல; ஆடை தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் அனைத்து மெஷினரிகள்; உதிரிபாகங்கள், அக்சசரீஸ் இறக்குமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.கப்பல் இயக்கம் சீராகி, கன்டெய்னர் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு நீங்கி, போக்குவரத்து கட்டணங்கள் குறையும் வரை, மெஷின் இறக்குமதியில் இத்தகைய சிக்கல்களை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.70 சதவீதத்துக்கும் மேல் சீன தையல் மெஷின்களே திருப்பூரில் பயன்படுத்தப்படுகின்றன. கப்பல் இயக்கம் பாதிப்பு, கன்டெய்னர் தட்டுப்பாட்டால், ஆர்டர் செய்த மெஷின்களை சீனாவிலிருந்து தருவிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X