மலையிலிருந்து குதித்து காதலர்கள் தற்கொலை

Added : செப் 26, 2021
Share
Advertisement
ராம்நகர்-காதலர்கள் இடுப்பில் பெல்டை கட்டிக்கொண்டு கப்பாளு மலையிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.தமிழகம் கிருஷ்ணகிரியின் உருகான் கிராமத்தை சேர்ந்த சதீஷ், 21, ஓசூரில் டாக்சி ஓட்டுனராக பணியாற்றினார். இவரும், இதே பகுதியில் வசித்த சந்தனா, 21,வும் மூன்று ஆண்டுகளாக காதலித்தனர்.இதையறிந்த சந்தனாவின் பெற்றோர், ஓராண்டுக்கு முன், ராம்நகர் கனகபுராவில் வசிக்கும்

ராம்நகர்-காதலர்கள் இடுப்பில் பெல்டை கட்டிக்கொண்டு கப்பாளு மலையிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

தமிழகம் கிருஷ்ணகிரியின் உருகான் கிராமத்தை சேர்ந்த சதீஷ், 21, ஓசூரில் டாக்சி ஓட்டுனராக பணியாற்றினார். இவரும், இதே பகுதியில் வசித்த சந்தனா, 21,வும் மூன்று ஆண்டுகளாக காதலித்தனர்.இதையறிந்த சந்தனாவின் பெற்றோர், ஓராண்டுக்கு முன், ராம்நகர் கனகபுராவில் வசிக்கும் இளைஞருக்கு, மகளை திருமணம் செய்து வைத்தனர்.செப்டம்பர் 22ல் கணவர் வீட்டிலிருந்து சந்தனா, காணாமல் போனார். கனகபுரா போலீஸ் நிலையத்தில் குடும்பத்தினர் புகார் செய்தனர். போலீசாரும் அவரை தேடினர்.இந்நிலையில், அவரும், சதீஷும் இடுப்பில் பெல்டை கட்டிக்கொண்டு, சாத்தனுார் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட கப்பாளு மலையிலிருந்து கீழே குதித்து, தற்கொலை செய்து கொண்டது, நேற்று தெரிய வந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X