கார்களை அடித்து நொறுக்கியது மாணவர்கள்

Added : செப் 26, 2021
Share
Advertisement
ஆர்.ஆர்.நகர்-வீடுகள் முன் நிறுத்தப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட கார்களை அடித்து நொறுக்கியது, மாணவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.பெங்களூரின் ஆர்.ஆர்.நகர் மற்றும் கெங்கேரியில், இரண்டு நாட்களுக்கு முன், அதிகாலை பைக்கில் வந்த சிலர், வீடுகளின் முன் நிறுத்தப்பட்டிருந்த, 20க்கும் மேற்பட்ட கார்களின் கண்ணாடிகளை, உருட்டுக்கட்டையால் அடித்து நொறுக்கி தப்பியோடியது.இது குறித்து,

ஆர்.ஆர்.நகர்-வீடுகள் முன் நிறுத்தப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட கார்களை அடித்து நொறுக்கியது, மாணவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

பெங்களூரின் ஆர்.ஆர்.நகர் மற்றும் கெங்கேரியில், இரண்டு நாட்களுக்கு முன், அதிகாலை பைக்கில் வந்த சிலர், வீடுகளின் முன் நிறுத்தப்பட்டிருந்த, 20க்கும் மேற்பட்ட கார்களின் கண்ணாடிகளை, உருட்டுக்கட்டையால் அடித்து நொறுக்கி தப்பியோடியது.இது குறித்து, விசாரணை நடத்திய ஆர்.ஆர்.நகர் போலீசார், ரோஹின் சைனி, சக்கம் பரத்வாஜ் உட்பட ஐந்து பேரை, நேற்று கைது செய்தனர்.வேறு மாநிலத்தை சேர்ந்த இவர்கள், பொறியியல் மாணவர்களாவர். சம்பவத்தன்று நண்பரின் பிறந்த நாள் பார்ட்டியில் பங்கேற்ற இவர்கள், மூக்கு முட்ட குடித்திருந்தனர்.அதிகாலை குடிபோதையில், பைக்கில் வீடு திரும்பும் போது, கார்களை அடித்து நொறுக்கியது, விசாரணையில் தெரிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X