வழிப்போக்கர்களை தாக்கி கொள்ளையடிக்க திட்டம்| Dinamalar

வழிப்போக்கர்களை தாக்கி கொள்ளையடிக்க திட்டம்

Added : செப் 26, 2021
Share
பெங்களூரு-வழிப்போக்கர்களை ஆயுதங்களால் தாக்கி, கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய ரவுடிகள், அவர்களின் கூட்டாளிகளை சி.சி.பி., போலீசார் கைது செய்தனர்.சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பாட்டீல் நேற்று கூறியதாவது:பெங்களூரின் ஞானபாரதி போலீஸ் நிலையத்துக்குட்பட்ட, குவெம்பு அரசு பள்ளி காம்பவுன்ட் அருகில், செப்டம்பர் 25ல், இரவு புட்டேனஹள்ளி,

பெங்களூரு-வழிப்போக்கர்களை ஆயுதங்களால் தாக்கி, கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய ரவுடிகள், அவர்களின் கூட்டாளிகளை சி.சி.பி., போலீசார் கைது செய்தனர்.

சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பாட்டீல் நேற்று கூறியதாவது:பெங்களூரின் ஞானபாரதி போலீஸ் நிலையத்துக்குட்பட்ட, குவெம்பு அரசு பள்ளி காம்பவுன்ட் அருகில், செப்டம்பர் 25ல், இரவு புட்டேனஹள்ளி, கே.பி.அக்ரஹாரா ரவுடிகள், தங்களின் கூட்டாளிகளுடன் பதுங்கியிருந்தனர்.அவ்வழியாக வரும் பொது மக்களை, ஆயுதங்களால் தாக்கி, கொள்ளையடிப்பது அவர்களின் திட்டம்.இது குறித்து தகவலறிந்த போலீசார், உடனடியாக அங்கு சென்று சோதனையிட்டு ரவுடிகள், கூட்டாளிகள் என, நால்வரை கைது செய்தனர்.ஒரு துப்பாக்கி, பயன்படுத்தப்படாத ஆறு குண்டுகள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X