பொது செய்தி

இந்தியா

செக் போஸ்ட்...

Added : செப் 26, 2021
Share
Advertisement
உடையுது ஒற்றுமை!கோலார் மாவட்ட ஏ.சி.பி., என்ற ஊழல் ஒழிப்பு படை ஆபிசர்கள் முனிசி.,க்கு வந்தாங்க. வந்து நோட்டம் போட்டாங்க. இது ஆபிசர்களுக்கும், முனிசி., உறுப்பினர்களுக்கும் தெரிஞ்சி போச்சாம்.வீசிய துாண்டிலுக்கு ஒண்ணுமே சிக்கலையேன்னு, வந்தவங்க ஏமாற்றம் அடைந்திட்டாங்க. ஏற்கனவே, பெண் ஆபிசரை சிக்கி வைத்து வெளியேற்ற வெச்சது போல, மாட்டிக்க வாங்கன்னு நெனச்சாங்க. சக்சஸ் ஆகாமல்

உடையுது ஒற்றுமை!கோலார் மாவட்ட ஏ.சி.பி., என்ற ஊழல் ஒழிப்பு படை ஆபிசர்கள் முனிசி.,க்கு வந்தாங்க. வந்து நோட்டம் போட்டாங்க. இது ஆபிசர்களுக்கும், முனிசி., உறுப்பினர்களுக்கும் தெரிஞ்சி போச்சாம்.வீசிய துாண்டிலுக்கு ஒண்ணுமே சிக்கலையேன்னு, வந்தவங்க ஏமாற்றம் அடைந்திட்டாங்க. ஏற்கனவே, பெண் ஆபிசரை சிக்கி வைத்து வெளியேற்ற வெச்சது போல, மாட்டிக்க வாங்கன்னு நெனச்சாங்க. சக்சஸ் ஆகாமல் போச்சாம்.இந்த ஏ.சி.பி., காரங்களிடம், அடிக்கடி வந்து போக வேணும்னு, முனிசி., முக்கிய புள்ளி தான் 'க்ளூ' கொடுத்தாராம்.இந்த சம்பவத்தாலே முனிசி.,யில் உறுப்பினர்கள் மத்தியில் பிளவு ஏற்பட்டிருக்குதாம்.ஏமாற்றும் ஏஜன்டுகள்!வெளி நாட்டில் கை நெறைய சம்பாதிப்பதாக சொல்லி, இளைஞர்களிடம்வேலை வாங்கி தருவதா நம்ப வைத்து, கோல்டு சிட்டியில சில ஏஜன்ட்டுங்க, 'தில்லாலங்கடி' வேலை செய்து பல பேருக்கு நாமத்தை சாத்தியிருக்காங்க.கடன உடனப்பட்டு ரெண்டு மூணு லட்சம் ரூபாய் செலுத்தி வெளிநாடு போய் சேர்ந்தவங்க அங்கு கொடுமைகளையும், கஷ்டங்களை, அனுபவிச்சவங்க, நாடு வந்து சேர்ந்தா போதும்னு கண்ணீரை சிந்தியவங்க நிறைய பேர் இருக்காங்க.இப்பேர்பட்ட ஏஜன்ட்டுகளை காக்கிக்காரங்க எச்சரித்து அந்த தொழிலுக்கே மூடு விழா நடத்தணுமுன்னு பாதிக்கப்பட்டவங்க மனம் நொந்து சொல்றாங்க.மனை திருட்டு ஜாஸ்தி!உழைத்து, வியர்வை சிந்தி வீட்டு மனையை வாங்கினவங்க பணம் சேமித்து, பிறகு வீடு கட்டலாமென பலரு மனையை காலியா வைத்திருக்காங்க.வீடு கட்டாமல் மனை காலியா இருந்தா, அதை அபகரிப்பதே சிலரு தொழிலா வைத்திருக்கிறாங்களாம். போலி ஆவணம் தயாரித்து 'லுாட்டி' அடிச்சுட்டு வர்ராங்களாம்.மனைகளை அபகரிக்கிறவங்க, ஜாஸ்தி ஆயிட்டாங்களாம். யாருடைய ஆவணம் ஒரிஜினல் என்பதே கண்டுபிடிக்க முடியாமல் திணறடிக்குறாங்களாம்.நியாயம் கிடைக்க என்ன செய்வதுன்னு தெரியாம ஒரிஜினல் காரர்கள் புகார் செய்தால், எதுவாக இருந்தாலும் கோர்ட்டுக்கு போய் முடிவு செய்துக்குங்கன்னு சட்டம் பேசி அனுப்புறாங்களாம்.நீதி தேவதை தான் நியாயம் தரணுமுன்னு வேண்டுறாங்க!தத்தளிக்குது 'பிஷ் லேன்!'உ.பேட்டை, ரா.பேட்டை சாலை மழைக்காலத்தில் நீரில் முழுகிற கதை இன்றல்ல; நேற்றல்ல, காலா காலமாக பாதிக்கிறாங்கன்னு பேசுறவங்க பேசிட்டு தான் இருக்காங்க. இதுக்கு தீர்வு எப்போ கிடைக்குமோ?வீட்டுக்குள் வெள்ளம் புகுந்து அல்லல் படுவதை தடுக்க உரிய திட்டமும் அமலுக்கு வரவே இல்ல. வெள்ள பாதிப்புகளை பார்வையிட சேற்றில், வெள்ளத்தில் போட்டோ போஸ் கொடுக்க நடந்து வரும் அரசியல் செல்வாக்கு காரர்களின் காலடிச் சுவடுக்கு குறையே காண முடியாது.'பிஷ்' நீரில் தான் வாழும்னு தெரியும். அதனால் தானோ இந்த இடத்தோட பெயரும் 'பிஷ் லேன்' என பெயர் வைத்திருக்காங்களோன்னு யோசிக்க வெச்சிருக்கு.ஆறுதல் சொல்வதை கேட்டு, கேட்டு பழகிப்போனவங்களுக்கு பாதுகாப்புக்கு ஏற்றதை செய்ய நிதியை கொட்டுவாங்களான்னு எதிர்ப்பாக்றாங்க. இதில தேவையான பர்சன்டேஜ்களை எடுத்துக்கட்டுமேன்னு உ.பேட்டைக்காரங்க கோபப்பட்டு சொல்றாங்க.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X