பொது செய்தி

இந்தியா

தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தி, வருவாயை அதிகரிக்க முன் வந்துள்ள பி.எம்.டி.சி., ம

Added : செப் 26, 2021
Share
Advertisement
பெங்களூரு-தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தி, வருவாயை அதிகரிக்க முன் வந்துள்ள பி.எம்.டி.சி., மத்திய அரசின் உதவியுடன், டிப்போக்களில், சோலார் பலகைகளை பொருத்தியுள்ளது. இதனால் மாதந்தோறும் லட்சக்கணக்கான ரூபாய் மிச்சமாகும்.கர்நாடகாவில் கொரோனா தொற்று பரவுவதற்கு முன்பே, பி.எம்.டி.சி., நஷ்டத்தில் இருந்தது. கொரோனா முதலாவது, இரண்டாவது அலையால், மாநில அரசு ஊரடங்கை

பெங்களூரு-தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தி, வருவாயை அதிகரிக்க முன் வந்துள்ள பி.எம்.டி.சி., மத்திய அரசின் உதவியுடன், டிப்போக்களில், சோலார் பலகைகளை பொருத்தியுள்ளது.

இதனால் மாதந்தோறும் லட்சக்கணக்கான ரூபாய் மிச்சமாகும்.கர்நாடகாவில் கொரோனா தொற்று பரவுவதற்கு முன்பே, பி.எம்.டி.சி., நஷ்டத்தில் இருந்தது. கொரோனா முதலாவது, இரண்டாவது அலையால், மாநில அரசு ஊரடங்கை அமல்படுத்தியது.மாதக்கணக்கில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இது நஷ்டத்தின் அளவை, மேலும் அதிகரித்தது. ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கவும் பணமின்றி பி.எம்.டி.சி., திணறியது. அரசு நிதியுதவி வழங்கியதால் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடிந்தது.ஊரடங்கு தளர்வுக்கு பின், பஸ்கள் இயக்கப்பட்டாலும் பயணியர் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. இப்போது தான் நிதானமாக அதிகரிக்க துவங்கியுள்ளது.செலவு குறைப்பில் கவனம்பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வருவாயை பெருக்குவதில், தேவையற்ற செலவை குறைப்பதில் பி.எம்.டி.சி., கவனம் செலுத்தியுள்ளது.மாதந்தோறும், பெஸ்காமுக்கு லட்சக்கணக்கான ரூபாய் மின் கட்டணம் செலுத்துகிறது. இதை தவிர்க்கும் நோக்கில், சோலார் மின்சார உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. மத்திய அரசின் உதவியுடன், டிப்போக்களில், சோலார் பலகைகள் பொருத்த திட்டம் வகுத்துள்ளது.தற்போது 45 டிப்போக்கள், 10 டி.டி.எம்.சி.,க்கள், 2 முக்கிய பஸ் நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு டிப்போவும், மாதந்தோறும் 80 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்துகின்றன. 25 டிப்போக்களில், சோலார் பலகைகள் பொருத்தியுள்ளது.வரும் நாட்களில், மற்ற டிப்போக்களிலும் பொருத்த முடிவு செய்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான ரூபாய் மிச்சமாகும்.பி.எம்.டி.சி., துணைத்தலைவர் வெங்கடேஷ் கூறியதாவது:ஒவ்வொரு டிப்போவிலும், 50 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. தினமும் 6,568 யூனிட் உற்பத்தி செய்யப்படுகிறது.பெஸ்காமுக்கு விற்பனைடிப்போக்களுக்கு பயன்படுத்தியது போக, மிச்சமாகும் மின்சாரம் பெஸ்காமுக்கு விற்று, வருவாய் பெறுவதில் கவனம் செலுத்தியுள்ளோம்.பி.எம்.டி.சி.,யில் மாற்றம் கொண்டு வர திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன்.செலவுகளுக்கு கடிவாளம் தேவையற்ற செலவுகளுக்கு கடிவாளம் போடுவதுடன், பொது மக்களுக்கு தரமான போக்குவரத்து சேவை வழங்க வேண்டும் என்பது என் கனவு.இதற்காகவே சோலார் மின்சாரம் உற்பத்தி செய்து, மின் கட்டண செலவை குறைக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X