பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி

Added : செப் 27, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் தெற்குஎம்.எல்.ஏ., செல்வராஜ், நேற்று கே.வி.ஆர்., நகர் பாரப்பாளையம் தனலட்சுமி நகரில் போர்வெல் பைப்பை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.பாரப்பாளையம் அரசு பள்ளிக்கு, தம்பி வெங்கடாசலம் சார்பாக, எம்.எல்.ஏ., செல்வராஜ், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை புதிய பள்ளி கட்டட நிதிக்காக பள்ளி ஆசிரியர்களிடம் வழங்கினார்.காங்கயம் ரோடு சென்னிமலைபாளையம்,

திருப்பூர்:திருப்பூர் தெற்குஎம்.எல்.ஏ., செல்வராஜ், நேற்று கே.வி.ஆர்., நகர் பாரப்பாளையம் தனலட்சுமி நகரில் போர்வெல் பைப்பை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.பாரப்பாளையம் அரசு பள்ளிக்கு, தம்பி வெங்கடாசலம் சார்பாக, எம்.எல்.ஏ., செல்வராஜ், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை புதிய பள்ளி கட்டட நிதிக்காக பள்ளி ஆசிரியர்களிடம் வழங்கினார்.
காங்கயம் ரோடு சென்னிமலைபாளையம், விஜயாபுரம், நல்லுார் பகுதியில், 47 வது வட்ட தி.மு.க., சார்பில் கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. எம்.எல்.ஏ., பங்கேற்று கொடியேற்றி இனிப்புகளை வழங்கினார். மாநகராட்சி துாய்மை பணியாளர்கள், 100 பேருக்கு அரிசி, காய்கறி வழங்கினார்.விஜயாபுரம் துவக்கபள்ளியில் தடுப்பூசி முகாமினை பார்வையிட்டு, மக்களிடையே குறைகளை கேட்டறிந்தார். நல்லுார் பகுதி தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் தியாகு ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில், 200 மாற்றுத்திறனாளிகளுக்கு, 5 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணம், நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X