சென்னை : உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரத்தை, கமல் இன்று துவக்குகிறார்.
தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல், அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக நடக்க உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிந்து, வேட்பாளர்களும் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பிரசாரம் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக, அக்கட்சியின் தலைவர் கமல், இன்று முதல் பிரசாரத்தை துவக்க உள்ளார்.
முதற்கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டம் கோவூரிலிருந்து பிரசாரத்தை ஆரம்பிக்க உள்ளார். அடுத்த கட்டமாக, 30ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் பிரசாரத்தை துவக்குகிறார். இந்நிலையில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில், மக்கள் நீதி மய்யமும் பங்கேற்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் மத்திய அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில், விவசாய சங்கங்களுடன் மக்கள் நீதி மய்யமும் பங்கேற்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE