எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

அங்கீகாரமில்லாத மனைகள் பதிவு 168 சார் - பதிவாளர்களுக்கு சிக்கல்

Added : செப் 27, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை:விதிகளை மீறி, அங்கீகாரமில்லாத மனைகளின் விற்பனை பத்திரங்களை பதிவு செய்து, வருவாய் இழப்பு ஏற்படுத்திய 168 சார் - பதிவாளர்கள் மீது பதிவுத் துறை அதிரடி நடவடிக்கை எடுக்க உள்ளது.தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், பதிவுத் துறைக்கு வந்த புதிய அமைச்சர், செயலர், ஐ.ஜி., ஆகியோர், முறைகேடுகளை தடுப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்காக, சார் - பதிவாளர்
 அங்கீகாரமில்லாத மனைகள் பதிவு 168 சார் - பதிவாளர்களுக்கு சிக்கல்

சென்னை:விதிகளை மீறி, அங்கீகாரமில்லாத மனைகளின் விற்பனை பத்திரங்களை பதிவு செய்து, வருவாய் இழப்பு ஏற்படுத்திய 168 சார் - பதிவாளர்கள் மீது பதிவுத் துறை அதிரடி
நடவடிக்கை எடுக்க உள்ளது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், பதிவுத் துறைக்கு வந்த புதிய அமைச்சர், செயலர், ஐ.ஜி., ஆகியோர், முறைகேடுகளை தடுப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்காக, சார் - பதிவாளர் அலுவலகங்களில் திடீர் ஆய்வு நடத்தி நேரடி நடவடிக்கையில் இறங்கினர்.
இதில் தெரியவந்த தகவல்கள் அடிப்படையில், 50க்கும் மேற்பட்ட சார் - பதிவாளர்கள்,
உதவியாளர்கள், மாவட்ட பதிவாளர்கள் இடமாற்றம்செய்யப்பட்டனர்.

அதன் தொடர்ச்சியாக, அரசுக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக, கோவை, ஈரோடு மாவட்ட பதிவாளர்கள், சென்னை நீலாங்கரை சார் - பதிவாளர் ஆகியோர், 'சஸ்பெண்ட்'
செய்யப்பட்டனர். அத்துடன், கடந்த ஆட்சியில் அங்கீகாரமில்லாத மனைகளை பதிவு செய்து, வருவாய் இழப்பு ஏற்படுத்திய அதிகாரிகள் குறித்தும் ஆய்வு நடந்தது.

இது குறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:அங்கீகாரமில்லாத மனைகளை பதிவு செய்ததாக 168 சார் - பதிவாளர்கள், உதவியாளர்கள் பெயர்கள் அடங்கிய பட்டியல்
தயாரிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து,
உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.நீதிமன்ற உத்தரவு, ஐ.ஜி., உத்தரவை, இவர்கள் அப்பட்டமாக மீறி செயல்பட்டுள்ளது உறுதியாவதால், கடும் நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம்.

அதே நேரம், இவ்வளவு பேரையும் ஒட்டு மொத்தமாக, 'சஸ்பெண்ட்' செய்வது சாத்தியமா; அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது குறித்தும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
27-செப்-202114:03:05 IST Report Abuse
raja இதுயெல்லாம் வசூலுக்காக பண்ற பூச்சாண்டி வேலையே தவிர வேற எந்த புண்ணாக்குக்கும் இல்லை என்று மக்களுக்கு நல்லா தெரியும்.....
Rate this:
Cancel
Muga Kannadi - chennai,இந்தியா
27-செப்-202113:10:34 IST Report Abuse
Muga Kannadi ஏன் தலிபான் ஸ்டைலில் ஏதாவது தண்டனை கொடுத்தால் நல்லாயிருக்கும்...
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
27-செப்-202109:31:15 IST Report Abuse
VENKATASUBRAMANIAN எல்லோரையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அப்போதுதான் அடுத்தவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள். சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X